Tamil Entrepreneurs

அதிகமான சம்பளம் தேவையில்லை; புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்காக வேலையை ராஜினாமா செய்த ஐஐடி பட்டதாரி


குழந்தை பிறந்தால் ஆண்களுக்கு அலுவலகத்தில் வழங்கப்படும் ஒரு வாரம் விடுமுறை தனக்கு போதுமானதாக இல்லாததால், புதிதாகப் பிறந்த தன் பெண் குழந்தையை பார்த்துக் கொள்ள தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார் ஐஐடி பட்டதாரி ஒருவர்.

கராக்பூரை சேர்ந்த ஐஐடி பட்டதாரி அங்கித் ஜோஷி என்பவர், மிக அதிகமான சம்பளம் பெறும் ஒரு வேலையில் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வழக்கமாக அலுவலகங்களில் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறையாக ஒரு வார கால விடுமுறை அளிக்கப்படும். அதேபோலவே அங்கித்திற்கும் ஒரு வார காலம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆனால் அங்கீத்தினால் தனது பெண் குழந்தையை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை. அந்த ஒரு வார காலம் விடுமுறை அவருக்கு போதுமானதாக இல்லாமையால் தான், அதிக சம்பளம் தரும் நல்ல வேலையாக இருந்தாலும் தன்னுடைய குழந்தைக்காக அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

இதை பற்றி அங்கித் கூறுகையில் “சில நாட்களுக்கு முன் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்காக அதிக சம்பளம் தரும் என்னுடைய வேலையை நான் ராஜினாமா செய்து விட்டேன். இது மற்றவர்களுக்கு வினோதமான முடிவாக தெரியும் என்று என்னால் உணர முடிகிறது. பலரும் என்னிடம் ‘எதற்காக வேலையை ராஜினாமா செய்தாய்? இனிமேல் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் தெரியுமா’ என்று கூறினர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி என் மனைவி ஆகான்ஷா இந்த விஷயத்தில் எனக்கு துணையாக என்னுடன் நின்றார்” இன்று அங்கித் தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.