ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்– ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. என். ஈஸ்வர், ஜி ஸ்கொயர் தொழிற்பூங்கா தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: “ஜி ஸ்கொர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் என்பது, ஜி ஸ்கொயர் குழுமத்தின் தொழிலகங்களுக்கான ரியல் எஸ்டேட் பிரிவாகும். தமிழ்நாடெங்கிலும் மிதமான விலைகளில் தொழிலக அமைவிடங்களை நிறுவனங்களுக்கு வழங்குவதின் மீது இப்பிரிவு சிறப்பு கவனம் செலுத்தும். தொடங்கப்படுகின்ற இப்புதிய செயல்திட்டம், சென்னைக்கு அருகே மிக அதிகமாக விரும்பப்படுகின்ற தொழிலகங்களுக்கான நிலப்பிரிவு உள்ள அரக்கோணத்தில் அமைந்துள்ளது. தொழிலகங்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதல் மிதமான விலையில் கிடைக்கக்கூடிய தொழிற்பூங்காவாக அரக்கோணத்தில் ஜி ஸ்கொயர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் அமைகிறது. தொழிலகங்களை உடனே தொடங்குவதற்கு தயார் நிலையிலுள்ள தொழிலக நிலப்பரப்புகள் கிடைக்கப்பெறுவதில் நிலவுகின்ற சவாலுக்கு இதன் மூலம் தீர்வு காண்பதே ஜி ஸ்கொயரின் நோக்கமாகும். எங்களிடமிருந்து இந்த நிலப்பரப்புகளை தொழிலகங்கள் வாங்கும்போது அச்சொத்து மீது எவ்வித தடைகளோ, வில்லங்கமோ இருக்காது. அதுமட்டுமின்றி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தாங்கள் விரும்புகின்ற வகையில், இந்த இடத்தை உருவாக்கி, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு தொழிலகங்களுக்கு முழுமையான சுதந்திரமும் இருக்கும். இந்த அம்சங்களே எம்முடைய புதிய தொழில் முயற்சியான இதில், பிற அமைவிடங்களிலிருந்து எங்களை வேறுபடுத்தி தனிச்சிறப்பானதாக ஆக்குகின்ற முக்கிய அம்சம் என்று நாங்கள் கருதுகிறோம்.“
ஜி ஸ்கொயர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் குறித்து
ஜி ஸ்கொயர், பல ஏக்கர்கள் பரப்பளவுள்ள நில பகுதிகளைக் கொண்டு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தமிழ்நாட்டின் நம்பர் 1 ரியல் எஸ்டேட் டெவலப்பர் என்ற பெருமைக்குரிய நிறுவனமாகும். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம், 15 ஆண்டுகள் சிறப்பான அனுபவத்தையும் 4000-க்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுக்கு இதுவரை 6 மில்லியன் சதுர அடி பரப்புள்ள நிலங்களை வழங்கியிருக்கும் தனிச்சிறப்பான பெருமையையும் கொண்டிருக்கிறது. 2000 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தொகுப்பை தற்போது கொண்டிருக்கும் இந்நிறுவனம், சியட், ஜேகே டயர்ஸ், ELGI, முருகப்பா குழுமம், சிஜிஐ, அசெண்டாஸ் போன்ற கௌரவம் மிக்க பெருநிறுவனங்கள் பலவற்றிற்கும் தொழிலகங்கள் அமைப்பதற்கான நிலங்களை வழங்கியிருக்கிறது.