International
oi-Vigneshkumar
ரியோ டி ஜெனிரோ: மங்கி பாக்ஸ் உலகெங்கும் பரவி வரும் நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் முறையாக இந்த நோயால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Monkey Pox எப்படி பரவும்? *Health
கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்து இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது.
மங்கி பாக்ஸ் ஏற்கனவே உள்ள வைரஸ் பாதிப்பு தான் என்றாலும் கூட அது ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்தளவுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும்.
போட்டுத் தாக்கும் மங்கி பாக்ஸ்.. இந்தியாவுக்கு ஆபத்தா? எடுக்க வேண்டி நடவடிக்கை என்ன! விரிவான தகவல்

மங்கி பாக்ஸ்
இதையடுத்து மங்கி பாக்ஸ் குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பல நாடுகளும் மங்கி பாக்ஸ் கண்காணிப்பை தீவிர்படுத்தி உள்ளன. உலக சுகாதார அமைப்பும் கூட மங்கி பாக்ஸ் பாதிப்பை பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்து உள்ளது. மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார கட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதல் உயிரிழப்பு
இதனிடையே மங்கி பாக்ஸ் காரணமாக உயிரிழப்பு பதிவாகி உள்ளது. ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும். பிரேசில் நாட்டில் சுமார் 41 வயது நபர் உயிரிழந்தார். பெரும்பாலும் மங்கி பாக்ஸ் பாதிப்பு லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது.. இந்தச் சூழலில், மங்கி பாக்ஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

என்ன காரணம்
இருப்பினும், அந்த நபருக்குத் தீவிர நோயெதிர்ப்பு மண்டலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அவரது உடல்நிலை சிக்கலானதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசில் நாட்டில் அவருக்கு மங்கி பாக்ஸ் தொற்றுக்கும் இதர பாதிப்புகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரிழந்ததாகப் பிரேசில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில்
பிரேசில் நாட்டில் மங்கி பாக்ஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. அங்கு சுமார் 1,000 பேருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெரும்பாலும், பிரேசில் தென்கிழக்கு மாகாணங்களில் தான் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டு வருகிறது. அங்குக் கடந்த ஜூன் 10ஆம் தேதி ஐரோப்பா சென்று வந்த ஒருவருக்கு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், வெறும் சில வாரங்களில் வைரஸ் பாதிப்பு ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

குரங்கு அம்மை
ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், நிணநீர் சுரப்பிகள், கொப்புளங்கள் போன்றவை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். உலகெங்கும் கடந்த சில மாதங்களில் மட்டும் 18,000 பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இப்போது பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த பாதிப்பு வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
English summary
Brazil man has died of monkeypox, first death outside Africa:(ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் மங்கி பாக்ஸ் உயிரிழப்பு பதிவானது) All things to know about Monkeypox deaths.
Story first published: Saturday, July 30, 2022, 10:37 [IST]