Memes
oi-Jaya Chitra
சென்னை: மீம்ஸ்களை தயார் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுத்தான் தேர்வு எழுதவே சென்றார்களோ என ஆச்சர்யப்படும் அளவிற்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

‘கால் காசென்றாலும் கவர்ன்மெண்ட் காசு..’ என எந்தக் காலத்திலுமே அரசு வேலைக்கு மட்டும் மவுசு குறைவதே இல்லை. ஏன் அரசு வேலையில் சேர மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதனால்தான் படிக்கும் போது, ஐஏஎஸ் ஆவேன், டாக்டர் ஆவேன் என சொன்னவர்கள் எல்லாம், படித்து முடித்ததும் எப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வை அறிவிப்பார்கள் என அதற்கு தயாராக ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதிலும் கொரோனா பிரச்சினையால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுவதால், 7,031 பணியிடங்களுக்கான தேர்வை சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியுள்ளனர். இதனால் ஒவ்வொரு ஊரிலும் தேர்வு மையங்கள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன.

ஊரே கொண்டாடும் தேர்வுத் திருவிழாவை மீம்ஸ் போட்டு கௌரவப் படுத்தாமல் விட்டால் நன்றாக இருக்குமா? மீம்ஸ்களை தயார் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுத்தான் தேர்வு எழுதவே சென்றார்களோ என ஆச்சர்யப்படும் அளவிற்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

இதோ அவற்றில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக…


English summary
These are some funny memes collection on TNPSC Group 4 Exam.
Story first published: Sunday, July 24, 2022, 17:39 [IST]