Covid-19

இந்தியாவில் மற்றும் உலக அளவில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள்

இந்தியா COVID-19 பெருந் தொற்றின் இரண்டாவது அலையில் போராடிக் கொண்டு இருக்கையில், தடுப்பூசி சப்ளைகள் மற்றும் போடுவது நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டு உள்ளது. 12,06,56,061 மக்கள் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டு உள்ளனர். மேலும் மே 28,2021 – ன் படி 4,41,23,192 மக்கள் இரண்டாவது டோஸ்-ம் பெற்றுக் கொண்டு உள்ளனர்.

இந்தியாவில், இரண்டு தடுப்பூசிகள், Covaxin மற்றும் Covishield, அவசர கால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் Central Drugs Standard Control Organization (CDSCO)- ஆல் அளிக்கப்பட்டு தற்போது அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. Covaxin நமது நாட்டில் Bharat Biotech நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) – National Institute of Virology (NIV) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட தடுப்பூசி. செயல்படாத கொரோனா வைரஸ்கள் கொண்ட இது, உடலில் செலுத்தப்படும் பொழுது நமது நோய் எதிர்ப்பு அணுக்கள் அதனை கண்டறியும்.

ALSO READ | 3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்மாதிரியாக திகழும் டெல்லி மருத்துவமனைகள்!

பிறகு இது நமது உடலில் உள்ள ஆன்டி பாடிகளை வைரஸ்களுக்கு எதிராக தூண்டி விடும். 3 ஆம் கட்டமான மருத்துவ பரிசோதனையின் தீவிர ஆராய்ச்சியில், Covaxin 78% மிதமான, லேசான மற்றும் தீவிர நோய் உள்ளவர்களுக்கு செயல்பட்டுள்ளது. மேலும் COVID-19 தீவிர நோய்க்கான 100% செயல்பாட்டை கொடுத்து மருத்துவ சேர்கைகளை குறைத்து உள்ளது. இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக 4-6 வார இடைவெளியில் கொடுக்க படுகிறது.

மற்றொரு கிடைக்கும் தடுப்பூசி, Covishield, இது Oxford-AstraZeneca உருவாக்கிய தடுப்பூசி. மேலும் Serum இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா மூலம் இங்கேயே தயாரிக்கப்படுகிறது. ஒரு வைரஸ் கிருமி தடுப்பூசிகளாக இருந்து, இது வேறு உருமாறிய வைரஸ்களை பயன்படுத்துகிறது அல்லது நமது உடல் செல்லிற்கு முக்கிய செய்தியை பரப்புகிறது. COVID-19 உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் முள் புரதம் எனப்படும் மகுடம் போல முற்கள் அதன் மேற்பரப்பில் கொண்டது. இந்த தடுப்பூசி நமது உடலில் அது போன்ற முள் புரதத்தை உருவாக்குகிறது.

ALSO READ | ஆவி பிடித்தலுக்கும், கரும்பூஞ்சை தொற்றுக்கும் என்ன தொடர்பு?

அதன் விளைவாக, உடல் அந்த வைரசை கண்டறிந்து அதற்கு எதிராக போராடும், மேலும் பிற்காலத்தில் அந்த நோய் தாக்கினால் அது போராட வசதியாக இருக்கும். Covishield SARS-CoV-2 கிருமிக்கு எதிராக 76% செயல்படும், 100% தீவிர அல்லது தீவிர நோய் மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு எதிராக செயல்படும், மற்றும் 85% அறிகுறி உடைய COVID-19 – ற்கு பாதிப்பிற்கு உள்ள 65 வயதான தனிநபர் மற்றும் மேற்படவர்களுக்கு எதிராக செயல்படும். பொதுநலம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), இந்திய அரசாங்கத்தின் பரிந்துரை படி இந்த தடுப்பூசியை இரண்டு முறைகளாக 12 – 16 வார இடைவெளியில் போடப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருட ஏப்ரல் மாதத்தில், Sputnik V, ரஷ்யன் தடுப்பூசி, அவசர கால அனுமதி பெற்று விரைவில் நாட்டின் தடுப்பூசி மையங்களுக்கு வரும். Covishield போல, Sputnik V – வும் வைரல் தடுப்பூசியை கொரோனா வைரசிர்க்கு எதிராக 91.6% செயல்படுகிறது என இறுதி கட்ட சோதனைகளில் தெரிய வந்துள்ளது. Sputnik V இரண்டு டோஸ்களாக 21 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்பட உள்ளது.

இருப்பினும், மற்ற தடுப்பூசிகள் போன்று இல்லாமல், இரண்டு டோஸ்கள் சிருது வேறுபட்டவை. தற்போதைய கணிப்பில் இந்த இரண்டு தடுப்பூசிகள் நீண்ட நேரம் மற்றும் கால பாதுகாப்பு நோயில் இருந்து காப்பாற்ற முக்கிய பங்கு வகிக்கிறது, ஒவ்வொரு தடுப்பூசிகள் வெவ்வேறு செயல் இழந்த வைரஸ்கள் கொண்டது. ஒரு முறை செலுத்தும் Sputnik Light என்ற தடுப்பூசியும் தயாரிப்பில் உள்ளது.

ALSO READ | தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகக்கூடாது: இந்திய மருத்துவ சங்கத்துக்கு டாக்டர் ரவீந்திரநாத் கண்டனம்!

மற்ற நாடுகளில் உள்ள சில தடுப்பூசிகள் Pfizer, Moderna, Johnson & Johnson (Janssen), Sinopharm, CoronaVac, Novavac உட்பட இன்னும் பல. Pfizer மற்றும் Moderna mRNA- சார்ந்த தடுப்பூசிகள், தொற்று ஏற்படுத்தும் நோய்களுக்கு எதிரான புதிய வகை தடுப்பூசி. நலிவுற்ற அல்லது செயலிழந்த வைரஸ்களை நமது உடலில் செலுத்துவதற்கு பதிலாக, mRNA தடுப்பூசிகள் நமது செல்களில் புரதம் அல்லது புரத துளியை தூண்டி உடலிற்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.

ஒரு வேளை நமது உடல் உண்மையான வைரசிற்கு வெளிப்பட்டால், இந்த எதிர்ப்பு சக்தி அதற்கு எதிராக போராட ஆன்டி பாடீஸ் உருவாக்கும். Pfizer மட்டுமே 12 வயது முதல் உள்ளவர்களுக்கு போட அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Johnson & Johnson (Janssen) ஒரு முறை போடப்படும் வைரல் வெக்டர் தடுப்பூசி மேலும் Sinopharm மற்றும் CoronaVac செயல் இழந்த வைரஸ் பயன்படுத்தகிறது.

தடுப்பூசிகளின் சோதனை கட்டத்தின் செயல்திறன் முடிவுகள் வந்த நிலையில், ஒவ்வொரு தடுப்பூசியின் உண்மையான செயல்திறன் நீண்ட காலங்களுக்கு பிறகே தெரியவரும். பொதுநலம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தை பொறுத்தவரை, கட்டுப்பாடுடன் கூடிய பயன்பாட்டை அவசர கால அடிப்படையில் அங்கீகரிக்கப் பட்டு, 1-2 வருடங்கள் வரை பாதுகாப்பை உறுதிபடுத்த தொடந்து கவனிக்கப்பட உள்ளது.

ALSO READ | ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மத்திய அரசு திட்டம்

தடுப்பூசி செயல்திறன் தடுப்பூசியின் திறனை அளந்து இந்த தடுப்பூசி சோதனை சொல்லும். COVID-19 தடுப்பூசிகளை கணிக்கும் பொழுது, அடிக்கடி குறிப்பிட்ட அறிகுறிகள் கொண்ட நோய்களுக்கு எதிராக மிக அழுத்தம் கொடுக்க படுகிறது. இருப்பினும், மிக முக்கியமான காரணி நம் கருத்தில் கொள்ளவேண்டியது தீவிர நோய்கள், படுக்கைகள் மற்றும் இறப்புகளுக்கு எதிராக பாதுகாக்கும் செயல்திறன்.

பெரும்பாலான தடுப்பூசிகள் உலக அரங்கில் விதிக்கப்பட்ட 50-60% செயல்திறனில் 70- 90% வரை செயல்திறன் கொண்டு உள்ளது, அதனால், பாதுகாப்பானதாக மற்றும் நல்ல தாக்கம் கொண்டதாக கருதப்படுகிறது. வெவ்வேறு தொழில்நுட்பம் மற்றும் சோதனை முறை கொண்டு உள்ளதால், தடுப்பூசிகளை ஒப்பிட்டு பார்ப்பது மிக அவசியம்.

ALSO READ | ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க… உங்கள் கையில்தான் இருக்கு மக்களே : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய்கள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் பரிந்துரை படி முதல் தடுப்பூசி கிடைப்பது மற்றும் மற்றொண்டோடு ஒப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது அலை சாத்தியம் உள்ள நிலையில், மிக அதிகமான மக்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக முக்கிய தேவை. இந்த நோயின் தீவிரம் கருதி, அளவு பாதுகாப்பும் உதவியாக இருக்கும்.

 

தடுப்பூசி

தயாரிப்பாளர் தடுப்பூசி வகை அறிகுறி கொண்டCOVID-19 பாதுகாக்கும் செயல்திறன் தீவிர நோய் மற்றும் மருத்துவமனை தேவையில் இருந்து பாதுகாக்கும் செயல்திறன்

 

டோஸ்களின் எண்ணிக்கை

முதல் மற்றும் இரண்டாம் டோசிற்கான இடைவெளி  முதல் மற்றும் இரண்டாம் டோசிற்கான இடைவெளி இந்தியாவில் அதன் இருப்பு
Pfizer

ஃபெயிசர்

BNT162b2
ஃபைசர், இன்க்., மற்றும் பயோஎன்டெக் mRNA 95% 100% 2 21 நாட்கள் இல்லை
Moderna

மாடர்னா

mRNA-1273
ModernaTX, Inc

மாடர்னாடிஎக்ஸ், இன்க்
mRNA 94.1% NA 2 28 நாட்கள் இல்லை
ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரா ஜெனீக

AZD1222
எஸ்.கே.பியோ (கொரியா குடியரசு) Viral vectorஎஸ்.கே.பியோ (கொரியா குடியரசு) Viral vectorவைரல் வேக்டர் 76% 100% 2 12 to 16 வாரங்கள் ஆம்
Sputnik V Sputnik V ஸ்புட்னிக் V (Gamaleyaகமலேயா)

 

RDIF and Panacea Biotech (in India)

RDIF மற்றும் Panacea Biotech (இந்தியாவில்)

 

Viral vector

வைரல் வேக்டர்

91·6% 100% 2 21 நாட்கள் விரைவில்
ஜான்சன் அண்ட் ஜான்சன்(Janssen ஜான்சன்)

JNJ-78436735

Janssen Pharmaceuticals Companies of Johnson & Johnson

ஜான்சன் & ஜான்சனின் ஜான்சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனங்கள்

Viral vector

வைரல் வேக்டர்
72% 86% 1 NA இல்லை
CoronaVac கோரோனவாக்(Sinovac சினோவாக்) Sinovac Life Sciences, Beijing, China

சினோவாக் லைஃப் சயின்சஸ், பெய்ஜிங், சீனா
Inactivated virus

செயலிழந்த வைரஸ்
50.65% மற்றும் 83.5%

2 21 நாட்கள் இல்லை
Sinopharm

சினோபார்ம்
Beijing Bio-Institute of Biological Products Co Ltd

பெய்ஜிங் பயோ-இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிகல் ப்ராடக்ட்ஸ் கோ லிமிடெட்
Inactivated virus

செயலிழந்த வைரஸ்
79% 79% 2 3 to 4 வாரங்கள் இல்லை
Covaxin

கோவசின்
Bharat Biotech

பாரத் பயோடெக்
Inactivated virus

செயலிழந்த வைரஸ்
78% 100% 2 4 to 6 வாரங்கள் ஆம்
Novavax*

நோவாவைக்ஸ்
Novavax

நோவாவக்ஸ்
Protein-based

புரதம் சார்ந்தது
96.4% 100% 2 3 வாரங்கள் இல்லை

 

ஐஸ்வர்யா ஐயர்

கோ ஆர்டிநேடர், கம்யூனிட்டி இன்வெஸ்ட்மென்ட்,

உணிட்டெட் வே மும்பை.

மூலம்:
https://www.bbc.com/news/world-asia-india-55748124
https://www.thelancet.com/action/showPdf?pii=S0140-6736%2821%2900234-8
https://www.bmj.com/content/373/bmj.n969
https://www.bharatbiotech.com/images/covaxin/covaxin-factsheet1.pdf
https://vaccine.icmr.org.in/covid-19-vaccine
https://www.pfizer.com/news/hot-topics/the_facts_about_pfizer_and_biontech_s_covid_19_vaccine
https://extranet.who.int/pqweb/sites/default/files/documents/Status_COVID_VAX_28May2021.pdf
https://www.mohfw.gov.in/covid_vaccination/vaccination/faqs.html
https://www.cdc.gov/coronavirus/2019-ncov/vaccines/different-vaccines/Pfizer-BioNTech.html
https://www.cdc.gov/coronavirus/2019-ncov/vaccines/different-vaccines/Moderna.html
https://www.cdc.gov/coronavirus/2019-ncov/vaccines/different-vaccines/janssen.html
https://www.bharatbiotech.com/covaxin.html
https://www.who.int/news-room/feature-stories/detail/the-oxford-astrazeneca-covid-19-vaccine-what-you-need-to-know
https://www.thelancet.com/action/showPdf?pii=S0140-6736%2821%2900234-8
https://www.who.int/news/item/07-05-2021-who-lists-additional-covid-19-vaccine-for-emergency-use-and-issues-interim-policy-recommendations
https://www.mohfw.gov.in/pdf/CumulativeCovidVaccinationCoverageReport28thMay2021.pdf
https://www.astrazeneca.com/media-centre/press-releases/2021/azd1222-us-phase-iii-primary-analysis-confirms-safety-and-efficacy.html
https://www.afro.who.int/news/what-covid-19-vaccine-efficacy
https://www.yalemedicine.org/news/covid-19-vaccine-comparison
https://www.who.int/news-room/feature-stories/detail/the-sinopharm-covid-19-vaccine-what-you-need-to-know

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published.