Tamil Entrepreneurs

‘‘இந்தி தெரிந்தால் பெரிய அளவில் பிசினஸ் செய்யலாம்’’ – மதுரை ‘யங் இந்தியன்ஸ்’ கூட்டத்தில் பேச்சு! | “If you know Hindi, you can do business on a large scale” – speech at Madurai “Young Indians” meeting!


தமிழைக் குறை கூறவில்லை…

ஈரோட்டு மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான சதீஷ் குமாருடன் கலந்துரையாடினார் சக்ஸஸ் மென்ஸ்வியர் நிறுவனத்தின் நிறுவனர் ஃபைசல் அஹமத். சதீஷ் குமார் சொன்னதாவது…

‘‘பணம் இருந்தால் மட்டும்தான் பிசினஸ் பண்ண முடியும் என்று இங்கு பலர் நினைக்கின்றனர். 2015-16-ம் ஆண்டில் எனது கடன் ரூ.25 கோடியாக இருந்தது. ஆனால், எனது ஆண்டு வருமானம் அப்போது ரூ.200 கோடியாக இருந்தது. வங்கிகளிடமிருந்து கடன் பெற்று நாங்கள் ரூ.450 கோடி அளவில் முதலீடு செய்தோம். அடுத்த ஆண்டிலேயே மேலும் ரூ.550 கோடி முதலீட்டை செய்ய முடிவு செய்தோம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது எங்களின் தொழில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றது.

சதீஷ் குமார், ஃபைசல் அஹமத்

சதீஷ் குமார், ஃபைசல் அஹமத்
S.Chandran

எனவே, பணம் இருந்தால் மட்டும்தான் தொழில் தொடங்க முடியும் என்பது சரியல்ல; தேர்ந்தெடுத்த தொழிலை பற்றிய தெளிவும், திறமையும் இருந்தாலே போதும் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று தொழிலைத் துவங்கலாம்.

பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பில் அமுல் நிறுவனம் முக்கியமான பங்காற்றுகிறது. எனினும், அமுல் நிறுவனத்தை எங்களின் போட்டியாளராக பார்க்காதீர்கள். ஏன் எனில், தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்களைவிட நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். மேலும், பால் பொருள்களின் ஒன்றான பன்னீரை நாங்கள் 1993-ம் ஆண்டு அறிமுகம் செய்தோம். எங்களுக்கு பின்னர் 10 வருடங்களுக்குப் பிறகுதான் அமுல் நிறுவனம் பன்னீரை அறிமுகம் செய்தது.

இந்தி கற்றுக்கொள்ளுங்கள்; பெரிய அளவில் பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தி தெரியாமல் இலக்கை அடைய முடியாது; தமிழ் என் தாய்மொழி. அதை நான் தமிழை குறை கூறமாட்டேன். ஆனால், இந்தி தெரிந்தால் பெரிய அளவில் பிசினஸ் செய்யலாம் என்று நான் சொல்வதை சரியாக புரிந்துகொள்ளுங்கள்’’ என்றார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.