Tamil Entrepreneurs

இந்த படத்தில் எதை முதலில் பார்த்தீர்கள் என்பதை வைத்து உங்கள் மனதின் வயதை அறியலாம்!


சமூக ஊடங்கள் வழியாக, இணையம் வழியாக அனுதினமும் ஒரு ஆப்டிகல் இல்லுஷன் புகைப்பத்தை கடந்து செல்லும் நீங்கள் எப்போதாவது.. உண்மையிலேயே இந்த ஆப்டிகல் இல்லுஷன் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? என்கிற அறிவியல் காரணத்தை தேடியது உண்டா? இல்லை என்றால்! முதலில் அதை பற்றி பேசுவோம்; பிறகு உங்களின் உளவயதை (Mental Age) வெளிப்படுத்தும் ஒரு ஆப்டிகல் இல்லுஷன் புகைப்படத்தை பற்றி பார்ப்போம்!

உங்கள் கண்கள் எப்போதாவது உங்களை ஏமாற்றி இருக்கிறதா? கண்களை தேய்த்துவிட்டு மீண்டும் பார்க்க வேண்டிய அளவுக்கு உங்களை புதிருக்குள் ஆழ்த்திய ஒன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம் என்றால், அது தான் ஆப்டிகல் இல்லுஷன்; அதை நீங்கள் எதிர்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நம் கண்கள் ஒரு படத்தை “உணரும்” போது தான் இந்த மாயைகள் உருவாக்கப்படுகின்றன. நம் மனம் உண்மையிலேயே இல்லாத சில இடைவெளிகளை தானாக நிரப்பும் போது ஒரு புகைப்படம் எதை காட்சிப்படுத்த விரும்புகிறதோ, அதை நாம் வேறுபட்ட கோணத்தில் பார்ப்போம் அல்லது அந்த படத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம்.

இப்படித்தான் ஆப்டிகல் இல்லுஷன் ஏற்படுகிறது மற்றும் நாம் மேற்கண்ட விளக்கமானது லிட்ரல் ஆப்டிகல் இல்லுஷனை (literal optical illusion) பற்றியது. ஆம்! ஆப்டிகல் இல்லுஷன் மொத்தம் 3 வகைப்படும். அதிலொன்று தான் லிட்ரல் ஆப்டிகல் இல்லுஷன், மீதமுள்ள இரண்டு வகைகள் – பிசியோலாஜிக்கல் ஆப்டிகல் இல்லுஷன் (physiological optical illusion) மற்றும் காக்நிட்டிவ் ஆப்டிகல் இல்லுஷன் (cognitive optical illusion) ஆகும்.

Also Read : மாயமில்லை மந்திரமில்லை…உங்க கண்ணுக்கும் 3டி கியூப் தெரிகிறதா?

இணையத்தில், சமூக ஊடங்களின் வழியாக நீங்கள் பார்க்கும் பெரும்பாலான ஆப்டிகல் இல்லுஷன் புகைப்படங்களானது லிட்ரல் ஆப்டிகல் இல்லுஷனின் கீழ் வரையறுக்கப்படுகின்றன. சரி இப்போது உங்களின் உளவயதை சோதித்து பார்த்து விடலாமா? கீழ்வரும் புகைப்படத்தில் நீங்கள் முதலில் எதை பார்க்கிறீர்கள் என்கிற அடிப்படையில் தான் உங்கள் மனதின் வயதை நாங்கள் வெளிப்படுத்த போகிறோம்.

நீங்கள் முதலில் எதை பார்த்தீர்கள்? தலை குனிந்த நிலையில் உள்ள முதியவரையா அல்லது தலை நிமிர்ந்து நிற்கும் இளம் பெண்ணையா?

ஒருவேளை நீங்கள் முதலில் ஒரு முதியவரை பார்த்து இருந்தால்…

இந்த ஆப்டிகல் இல்லுஷன் புகைப்படத்தை பார்த்ததுமே, தலை குனிந்த நிலையில் இருக்கும் ஒரு முதியவரை நீங்கள் முதலில் கவனித்து இருந்தால், நீங்கள் உங்கள் மனம் மற்றும் எண்ணங்கள் – முதிர்ச்சியடைந்துள்ளது என்று அர்த்தம், வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளுடன் நீங்கள் போதுமான அனுபவங்களைப் பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம். இதன் விளைவாக நீங்களே உங்களை ஒரு புத்திசாலியாக வளர்த்து கொண்டிருப்பீர்கள். மேலும் நீங்கள் அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பீர்கள்!

ஒருவேளை நீங்கள் முதலில் ஒரு இளம் பெண்ணை பார்த்து இருந்தால்…

குறிப்பிட்ட படத்தில், நீங்கள் முதலில் ஒரு இளம் பெண்ணை கண்டு இருந்தால், உங்கள் இதயம் இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உலகை ஆர்வத்துடன் பார்க்க முனைகிறீர்கள். நீங்கள் வளர்ந்து கொண்டே போனாலும் கூட உங்களுக்குள் இருக்கும் குழந்தையைப் பாதுகாத்து கொண்டே வருகிறீர்கள். வாழ்க்கையின் எளிமையான விஷயங்களில் கூட மகிழ்ச்சியைக் காண தவறாத நீங்கள் மிகவும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்!

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.