Tamil Entrepreneurs

இனி ஆன்லைன் ஷாப்பிங் review-களுக்கு வந்தாச்சு செக்! ஐ.எஸ் 19000:2022 வெளியீடு!| IS 19000:2022 has been established- a check for online shopping review


வலைத்தளங்கள் வழிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை தெரிந்துகொள்ள BIS-யில் சரிபார்த்து சான்று பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை இதை பின்பற்றாமல், தவறான வணிக நடைமுறைகளை பின்பற்றினால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் குறிப்பிட்ட வலைத்தளம் மேல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.

ஆன்லைன் ஷாப்பிங் review

ஆன்லைன் ஷாப்பிங் review

இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு ஷாப்பிங் என்றாலே ஆன்லைன் ஷாப்பிங்தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். நாம் கடைவீதிக்கு சென்று பொருட்களை தேடித்தேடி வாங்குவதைவிட ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு க்ளிக் நமது ஷாப்பிங்கை எளிதாக்கிவிடுகிறது. ஆனால், நாம் நேரில் சென்று பொருட்களை வாங்கும்போது அதை தொட்டு தரம் பார்த்து வாங்கமுடியும்; ஆன்லைன் ஷாப்பிங் என்று வந்துவிட்டால் அந்த வசதி கிடையாது. அதனால் நமக்கு இருக்கும் ஒரே ஆப்சன் ரிவ்யூ (review) பார்த்து பொருட்களை வாங்குவதுதான்.

ஒரு பொருளுக்கு வந்திருக்கும் அனைத்து ரிவ்யூக்களும் உண்மையானதா என்ற சந்தேகம் நமக்கு எழுந்துகொண்டேதான் இருக்கிறது. மேலும் பல ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் போலியான ரிவ்யூக்கள் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இது நுகர்வோருக்கான பிரச்னை மட்டும் இல்லை; விற்பவர்களுக்குமானதுதான்.



Source link

Leave a Reply

Your email address will not be published.