ஸ்ட்ராபெர்ரி பெண்ணும், இயற்கை விவசாயமும் குர்லீன் சாவ்லா
24 வயதாகும் குர்லீன் சாவ்லா என்ற இளம்பெண்ணை பற்றிதான் விவசாய உலகமே புகழ்ந்து பேசுகிறார்கள். அவர் செய்யும் ஸ்ட்ராபெர்ரி விவசாயம்தான் அதற்கு காரணம். கொரோனா லக்டவுன் பொது இந்த புது வகையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். முதலில் குர்லீன் சாவ்லா ஸ்ட்ராபெர்ரி விவசாயம் பற்றி ஆன்லைன் மூலம் தேடி கற்றிருக்கிறார். குறைந்த பரப்பளவில் சோதனை செய்து வெற்றி கண்டார். தற்போது 7 ஏக்கர் வரை ஸ்ட்ராபெர்ரி விவசாயம் செய்து பல இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி ஆச்சரியப்பட வைக்கிறார் குர்லீன் சாவ்லா.
குர்லீன் சாவ்லா, இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் புனே நகரத்தில் சட்டப்படிப்பை (BL) படித்து முடித்துள்ளார். அந்த சமயத்தில்தான் கொரோனா பரவல் அதிகரித்து இருந்தது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு லாக்டவுன் (Lockdown) உத்தரவு அறிவிக்கப்பட்டு இருந்தது. குர்லீன் சாவ்லா கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். கொரோனா பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. இந்த நேரத்தில் குர்லீன் சாவ்லா வீட்டிற்குள் முடங்கி இருந்திருக்கிறார்.
குர்லீன் சாவ்லாக்கு தோட்டக்கலையில் Horticulture ஆர்வம் அதிகம் இருந்த காரணத்தால் அதை பற்றிய தகவல்களை இணையத்தில் Internet தேடியுள்ளார். மேலும் தோட்டக்கலைப் பற்றிய வீடியோக்களை வலையொளியில் YouTube பார்த்து ரசித்து உள்ளார். அதிலும் குறிப்பாக ஸ்ட்ராபெர்ரி Strawberry செடிகளைப் பற்றி பார்த்து ரசித்து உள்ளார்.
ஆகையால் வீடியோக்களை பார்ப்பதோடு நின்றுவிடாமல், சோதனை முயற்சியாக வளர்த்துப் பார்க்க முடிவு செய்துள்ளார். அதனால் சில ஸ்ட்ராபெர்ரி Strawberry செடிகளை வளர்க்கத் தொடங்கினார். அந்த ஸ்ட்ராபெர்ரி நன்றாகவே வளர்ந்து வந்தன. நன்றாக வளர்ந்த ஸ்ட்ராபெர்ரி செடிகளில் வளர்ந்து விளைந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மிகவும் சுவையாக இருந்தன. நல்ல விளைந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டு பார்த்த குர்லீன் சாவ்லாவின் அப்பா ஹர்ஜித் சிங் மனமார பாராட்டியுள்ளார். அதனால் குர்லீன் ரொம்பவே உற்சாகமடைந்துள்ளார். குர்லீன், ஆன்லைன் Online மூலம் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி Farming முறைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள தேடி தேடி ஆர்வமாக கற்றுக்கொண்டார்.
குர்லீன் குடும்பத்தின் சொத்தாக 4 ஏக்கர் நிலம் இருந்தது. அதில்தான் ஸ்ட்ராபெர்ரி செடிகளை சாகுபடி செய்ய விரும்பினார். ஆனால் அந்த 4 ஏக்கர் நிலம் ரொம்ப வருடமாக விவசாயம் செய்யாமல் கிடந்தது. அந்த நிலத்தை விவசாயத்திற்கு ஏற்றவாறு மாற்றினார். அதன் பிறகு சோதனை முயற்சியாக ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஸ்ட்ராபெர்ரி செடிகளை நடவு செய்தார். ஸ்ட்ராபெர்ரி செடிகளை நன்கு கவனித்து வந்துள்ளார். ஸ்ட்ராபெர்ரி செடிகள் நன்றாக வளர்ந்து இருந்தது. அந்த ஸ்ட்ராபெர்ரி செடிகளிலிருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்தார்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கு சந்தையில் Market நல்ல வரவேற்பு இருப்பதால் விளைச்சலை அதிகப்படுத்த விரும்பினார். ஆகையால் விளைநிலத்தின் பரப்பளவை விரிவுபடுத்தி பயிரிட செய்தார். குர்லீன் சாவ்லா தனது தோட்டத்தை ஏழு ஏக்கராக அதிகப்படுத்தினார். அதில் ஸ்ட்ராபெர்ரி மட்டுமில்லாமல் முட்டைகோஸ், தக்காளி, காலிபிளவர் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்தார்.
குர்லீன் சாவ்லா தனது தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மற்ற காய்கறிகளான தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை எல்லாம் முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்தார். இயற்கை விவசாய முறையில் விளைவிப்பதால் விளைபொருளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. குர்லீன் சாவ்லா தனது தோட்டத்தில் இருந்து தினமும் சுமார் 70 கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்கிறார். இந்த விவசாய வேலைக்கு தொழிலதிபரான அவரின் அப்பா ஹர்ஜித் சிங் சாவ்லாவும் உதவி செய்கிறார்.
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மற்ற காய்கறிகளான தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை விற்பனை செய்வதற்கு வலைத்தளம் Website ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த வலைத்தளம் Website மூலம் தினந்தோறும் 250-க்கும் அதிகமான ஆன்லைன் ஆர்டர்கள் பெறப்படுகின்றன. ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதின் மூலம் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மாதம் ஒன்றிற்கு பல இலட்சம் வருமானம் வருகிறது என்று உற்சாகமாக சொல்கிறார், ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா.
இவ்வளவு குறுகிய காலத்தில் விவசாயத் துறையில் அசுர வளர்ச்சியடைந்த குர்லீன் சாவ்லாவை ஸ்ட்ராபெர்ரி பெண் என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில் ஜான்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்ட்ராபெர்ரி Strawberry நிகழ்ச்சிக்கு குர்லீன் சாவ்லாவை தூதுவராக Brand Ambasador உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளம் தலைமுறையினர் நவநாகரிகத்திற்கும், நவீன தொழில் நுட்பத்திற்கும் தங்களை மாற்றிக்கொண்டு பல சாதனைகளை புரிந்து வருகிறார்கள். தங்களால் இதை செய்ய முடியும் என்று துணிந்து செய்பவர்கள் எத்தகைய துறையிலும் வெற்றியை காண்கிறார்கள். தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதியுடன் ஒரு தொழிலை செய்யும் போது அதில் ஏற்படும் இடர்பாடுகளை கண்டறிந்து களைய முடியும். மேலும் அதில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு வெற்றி பெற முடியும். இயற்கை விவசாயத்தின் மூலம் ஸ்ட்ராபெர்ரி பெண்ணாக ஜொலிக்கிறார் குர்லீன் சாவ்லா. நன்றி வணக்கம்!!