
கம்பு தோசை, கேழ்வரகு, திணை, உளுந்தங்களி, கோதுமை, சாமை, கொள்ளு, முடக்கத்தான் இப்படி பாரம்பரிய முறையில சாப்பாடு கொடுத்துட்டு வர்றேன். இதுக்கு காரணம் எங்க அம்மா! ஒருமுறை, விருதுநகர்ல ஒரு கடையில கம்பு தோசை சாப்பிட்டேன். அவ்ளோ ருசியா இருந்துச்சு. பாரம்பரிய தானியத்துல இவ்வளவு ருசியா ஒரு உணவை கொடுக்க முடியுமானு? ரொம்ப ஆச்சரியப்பட்டேன். அன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வந்து அந்த உணவகத்தில் சாப்பிட்ட சாப்பாடு பற்றி ரொம்ப சிலாகித்து எங்க அம்மாக்கிட்ட பேசிட்டு இருந்தேன்.
கொஞ்சம் பொறுனு, என்னை உட்காரவச்சுட்டு எங்க அம்மா கிச்சனுக்குள்ள போயிடுச்சு. ஒரு 20 நிமிஷத்துல திரும்பி வரும்போது ஒரு தட்டுல தோசை எடுத்துட்டு வந்து இத சாப்பிட்டு பாருனு சொன்னாங்க. ம்ம்.. நானும் சாப்பிட்டேன். அய்யோ, அவ்ளோ ருசி, அவ்வளவு நேரமும் நான் எந்த தோசையை பற்றி சிலாகிச்சு பேசினேனோ அதே கம்பு தோசையத்தான் எங்க அம்மா சுட்டு கொடுத்திருக்காங்க. அதைச் சாப்பிட்டதுல காலையில நான் ஹோட்டல்ல சாப்பிட்ட ருசிய மறந்துட்டேன்.