Memes
oi-Jaya Chitra
சென்னை: ஏப்ரல் முதல் தேதியை மீம்ஸ் போட்டு, நண்பர்களைக் கலாய்த்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்ற மாதங்களின் முதல் தினத்தில் இருந்து, ஏப்ரல் ஒன்று வித்தியாசப்பட்டது. காரணம் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ‘காலுக்கு கீழே பாம்பு’ என்பதில் ஆரம்பித்து, தலைக்கு மேலே, ‘வெள்ளை காக்கா பறக்கிறது’ என்பது வரை தங்களால் முடிந்த அளவு மொக்கை ஜோக்குகளாகச் சொல்லி, நண்பர்களை ஏமாற்றுவதை, ஏமாற்ற முயற்சிப்பதை காலம் காலமாக செய்து வருகின்றனர் மக்கள்.
என்னதான், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என வேறுபடுத்தினாலும், ஏப்ரல் ஒன்றாம் தேதி, மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பதில் அனைவருமே ஒரே மாதிரியான டெக்னிக்கைத்தான் பின்பற்றுகின்றனர். ஏப்ரல் முதல் தேதி காலையிலேயே யாரை முதலில் ஏமாற்ற வேண்டும் என முதல்நாள் இரவே திட்டம் போட்டு வைக்கும் நண்பர்கள் ஏராளம்.
அதென்னவோ மற்ற நாளெல்லாம் தன் நண்பர்களைக் கொண்டாடுபவர்கள், இன்றைய தினம் மட்டும் அவர்களை முட்டாளாக்கி சந்தோசப்பட்டுக் கொள்கின்றனர். இந்தாண்டும் வழக்கம் போலவே முட்டாள்கள் தினத்தை சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ் போட்டு அதகளப் படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…






English summary
These are some jolly memes collection on April month 1st date.
Story first published: Friday, April 1, 2022, 13:00 [IST]