International
oi-Hemavandhana
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.58 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர்.
உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.38 லட்சத்தை தாண்டிவிட்டது.
ஒருவர் கூட தமிழர் இல்லையா? நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் நியமனத்துக்கு திருமாவளவன் கண்டனம்
இதுவரை இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,258,741 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 512,727,166 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 466,597,021 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,871,404 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா
இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 83,029,379 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 59,628 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,020,588 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 251 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 80,653,475 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள்
அதேபோல நம் இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது.. 43,073,973 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 1,487 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 523,753 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை.. இதுவரை 42,530,622 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியா
கொரோனாவின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது… தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த 7 மாத காலமாகவே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

3வது நாடு
ஆரம்பம் முதலே தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியாவும் 2 இடத்திலேயே பாதிப்பில் நீடித்து வருகிறது.. 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடாக கருதப்படுகிறது.. இந்த நாட்டில் 30,433,042 பேர் இதுவரை அங்கு தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 14,122 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 663,484 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 195 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 29,507,557 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.
English summary
Coronavirus positive case crosses 512,727,166 and death case 6,258,741 கொரோனாதொற்று பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது
Story first published: Saturday, April 30, 2022, 6:47 [IST]