Tamil Entrepreneurs

உலகின் மிக வயதான நாய் என்ற சாதனையை படைத்த 22 வயதான Gino Wolf.!


மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் பிராணிகளில் நாய்களுக்கு முக்கிய இடம் உண்டு. நம்முடைய நெருங்கிய நண்பர்களாக நாய்கள் இருக்கின்றன. சோஷியல் மீடியாக்களில் மனிதனுக்கும் – நாய்க்கும் உள்ள நெருங்கிய உறவை பறைசாற்றும் பல செய்திகள், கதைகள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

நமக்கு உற்ற நண்பனாக இருக்கும் நாய்கள் பெரும்பாலும் 8 முதல்15 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழ்கின்றன. 20 ஆண்டுகளுக்கு மேல் நாய்கள் உயிர் வாழ்ந்த சம்பவங்கள் மிகவும் அரிதானது. இந்நிலையில் கின்னஸ் உலக சாதனையின் படி உலகின் மிக வயதான நாய் என்ற பட்டத்தை கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு நாய் பெற்று சாதனை படைத்து உள்ளது.

அதிக வயது உயிர் வாழும் நாயாக கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்த நாயின் பெயர் ஜினோ வுல்ஃப் (Gino Wolf). கடந்த செப்டம்பர் 2000-ம் ஆண்டு பிறந்த இந்த நாய்க்கு இப்போது 22 வயதாகிறது. 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி பிறந்த இந்த நாயை, கடந்த 2002-ல் கொலராடோவின் ஹ்யூமன் சொசைட்டி ஆஃப் போல்டர் பள்ளத்தாக்கிலிருந்து தற்போது 40 வயதாகும் அலெக்ஸ் வுல்ஃப் என்பவர் தத்தெடுத்து உள்ளார்.

Gino Wolf-ன் உரிமையாளரான அலெக்ஸ் வுல்ஃப் பேசுகையில், இயல்பாக நாய்கள் உயிர் வாழும் ஆண்டுகளை தாண்டி வாழ்ந்து வரும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நான் மிகவும் உன்னிப்பாக Gino-வை கவனித்து வருகிறேன். வயதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது ஒப்பீட்டளவில் இன்னும் Gino மிகவும் நல்ல நிலையில் மற்றும் அழகாக இருந்து வருவது என்னை மட்டுமல்ல அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 15, 2022 அன்று Gino தனது 22-வது பிறந்தநாளை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் சூப்பராக கொண்டாடி இருக்கிறது. எனினும் 22 வயதாகிவிட்டதால் இதன் கண்பார்வை முன்போல இல்லை என்று அலெக்ஸ் தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எல்லாம் என்னுடன் Gino இருந்திருக்கிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என கூறி இருக்கிறார்.

Also Read : உணவுகளின் விலை இவ்வளவு மலிவா..! –  பழைய பில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்.!

இதன் நீண்ட ஆயுள் ரகசியம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ள உரிமையாளரான அலெக்ஸ் ஆரோக்கியமான, சீரான உணவு மற்றும் தவறாத பராமரிப்பு, குடும்பம் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான ஆதரவு உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்க கூடும் என கூறி இருக்கிறார்.

வயதாக்கி விட்டதால் முன் போல் துறுதுறுவென இல்லாவிட்டாலும் சால்மன் மீன்களில் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவது, வண்டியில் உட்கார வைத்து ஜாலியாக சுற்றுவது, குளிரை தாங்க சூடான அறையில் குட்டி தூக்கம் போடுவது உள்ளிட்டவற்றை விரும்பி செய்வதாக கூறுகிறார் அலெக்ஸ். அதே போல உரிமையாளர் அலெக்ஸின் கூற்றுப்படி, Gino தனது இளவயதில் அதிக எனர்ஜியை கொண்டிருந்ததாக தெரிகிறது.

சிறிய நாய்களுக்கான பார்க்கில் விளையாடுவதை விட பெரிய நாய்களுக்கான பார்க்கில் விளையாடுவதை மிகவும் விரும்பி இருக்கிறது. பெரிய நாய்கள் தன்னைச் சுற்றி வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து துள்ளி குதித்து விளையாடி இருக்கிறது. Gino நிறைய அன்பை பெற்றுள்ள ஒரு வலுவான நாய் என்பதில் தனக்கு மிகவும் பெருமை மற்றும் மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார் அலெக்ஸ்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments