Tamil Entrepreneurs

உலக மக்கள் தொகை 8 பில்லியன்… ஆனால் நான் இன்னும் சிங்கிள்.. தெறிக்கவிடும் 90’ஸ்


உலக மக்கள் தொகை நவம்பர் 15 அன்று 8 பில்லியனை எட்டியதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 1974-இல் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 4 பில்லியனாக இருந்தது. உலக மக்கள்தொகை 7 முதல் 8 பில்லியனாக வளர 12 ஆண்டுகள் எடுத்தாலும், இது 9 பில்லியனை எட்டுவதற்கு சுமார் 15 ஆண்டுகள் ஆகும். அதாவது 2037 வரை இதற்கான கால அளவாக எடுத்து கொள்ளும். இது உலக மக்கள்தொகையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதற்கான அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது என்று ஐநா சபை கூறியுள்ளது.

இது குறித்த பல சமூக வலைதள பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உலக மக்கள் தொகையை பற்றிய மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. எட்டு பில்லியன் என்கிற வரிசை கணக்கில் நேற்று உலகில் எங்காவது ஒரு குழந்தை பிறந்திருக்கும் என்று கூட ட்விட்டரில் பலர் ட்வீட் செய்து வருகின்றனர். அதே போன்று, 8 பில்லியன் மக்கள் தொகை இருந்த போதிலும் இன்னும் சிங்கிளாகவே இருப்பதாக பலர் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வளவு மக்கள் தொகை இருந்தபோதிலும், அவர்களில் பலர் இன்னும் தனிமையில் இருப்பதாக பதிவிட்டு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு நபரை “முழுமைப்படுத்த” காதல் உறவுகளுக்கு நமது கலாச்சாரம் தேவையற்ற அழுத்தத்தை அளிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர். பலரின் ட்வீட்டர் பதிவுகள் பார்ப்பவர்களை வாய்விட்டு சிரிக்கும் படியாகவும் உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.