Tamil Entrepreneurs

`ஊரே Pan World'னு போனப்போ, ஒருத்தன் மட்டும் உள்ளூரை டார்கெட் பண்ணான்!' – HUL-ன் வெற்றிக்கதை – 9


ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டு, இன்றைக்கும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது ஹெச்.யு.எல்.தான். இந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை சில நாள்களுக்குமுன் வெளியானது. 50,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிய முதல் எஃப்.எம்.சி.ஜி நிறுவனமாக ஹெச்.யு.எல். திகழ்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.50,336 கோடியை வருமானமாக ஈட்டிய முதல் எப்.எம்.சி.ஜி நிறுவனமாக ஹெச்.யு.எல் உருவாகி இருக்கிறது.

இதில் விம், ரின், டவ், வீல், ஹார்லிக்ஸ், குளோ அண்ட் லவ்லி, லைப் பாய் உள்ளிட்டவை ரூ.2,000 கோடி பிராண்டுகளாக மாறி இருக்கிறது. இது தவிர, 16-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் ரூ.1,000 கோடி பிராண்டுகளாக மாறி இருக்கிறன. மேலும் சர்ஃப் மற்றும் புரூக்பாண்ட் உள்ளிட்டவை ரூ.5,000 கோடி பிராண்டுகளாக மாறியுள்ளன.

125-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக செயல்பட்டுவரும் நிறுவனத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, பல திருப்புமுனைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Hindustan Unilever

சமரசம் இல்லாத இலக்கு…

2000-ம் ஆண்டு ஹெச்.யு.எல். நிறுவனத்தின் வருமானம் ரூ.11,392 கோடி. ஐந்தாண்டுகளுக்கு பிறகும் ரூ.11,976 கோடி மட்டுமே. இந்த ஐந்தாண்டுகளில் பெரிய வளர்ச்சி இல்லை. இந்த சமயத்தில் ஹரிஷ் மன்வானி தலைமைப் பொறுப்புக்கு வந்து நிறுவனத்தை மீட்டெடுத்தார். அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனம் மீண்டுவரத் தொடங்கியது. மிகப்பெரிய நெட்வொர்க்கை அமைத்தனர். ஆனால், 2008-ம் ஆண்டு மீண்டும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி உண்டானது. அதனால் மீண்டும் ஒரு தேக்கநிலை பொருள்களின் விலை உயர்ந்ததால் நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை. அதனால் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது.

இந்த நிலையில் இருந்து மீண்டு வருவது என்பது கட்டாயம். டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க்கில் முதல் இடத்தில் இருக்கிறோம். நெட்வொர்க்கில் முதல் இடத்தில் இருக்கிறோம். இந்த இடத்தை இழந்துவிட்டால் இன்னும் நெருக்கடி அதிகரிக்கும் என்பதால், நெட்வொர்க்கை உயர்த்தத் திட்டமிட்டார் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி நிதின் பரஞ்சபே. அப்போது சுமார் 10 லட்சம் கடைகளில் ஹெச்.யு.எல். பொருள்கள் கிடைத்தன. ஆண்டுக்கு 15,000 கடைகள் என்னும் அளவில் மட்டுமே விரிவாக்கம் இருந்தது.

ஆனால், அடுத்த ஒரு ஆண்டில் ஐந்து லட்சம் புதிய கடைகளைச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்தார். ஆனால், யாருக்கும் நம்பிக்கை இல்லை. கொஞ்சம் குறைக்கலாம் என விற்பனைக் குழு கோரிக்கை வைத்தது. ஆனால், நிதின் மறுத்துவிடுகிறார்.

அப்போது நிதின் கூறிய விளக்கம் பிசினஸில் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவருக்கும் அடிப்படைப் பாடம். “ஒரு மேனேஜர் என்பவர் தன்னிடம் இருக்கும் வசதிக்கு (பட்ஜெட் மனிதவளம்) ஏற்ப திட்டமிடுவார். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கு தன்னிடம் இருக்கும் வசதிகள் குறித்த கவலை இல்லை. அவர்களுக்கு குறிக்கோளில் மட்டுமே கவனம் இருக்கும். அதனால் மேனேஜராக மட்டும் இல்லாமல் தொழில்முனைவோராக யோசியுங்கள்’’ என நிதின் கூறினார்.

2010-ம் ஆண்டு இறுதியில் ஐந்து லட்சம் புதிய கடைகள் இணைக்கப்பட்டன. இத்துடன் வேலை முடிந்தது என அனைவரும் நினைக்க, அடுத்த ஆண்டும் ஐந்து லட்சம் புதிய கடைகள் என்னும் இலக்கை நிர்ணயம் செய்ய, அந்த இலக்கும் 2011-ம் ஆண்டு இறுதியில் எட்டப்பட்டது. இந்தக் கடைகள் எல்லாம் ஏற்கெனவே செயல்பட்டு வந்தவைதான். இலக்கு வைத்து செயல்பட்டபோது இந்தக் கடைகள் எல்லாம் புதிய வாடிக்கையாளர்களாக மாறின. இல்லாவிட்டால் அது ஹெச்.யு.எல் நிறுவனத்தின் வெளியிலேயேதான் இருந்திருக்கும்.

Hindustan Unilever

சி.இ.ஓ பேக்டரி

ஒரு நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட வேண்டுமெனில், அதன் படைப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் மனதைத் துல்லியமாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதில் ஹெச்.யு.எல் நிறுவனம் தெளிவாக இருந்தது.

“நீங்கள் ஐ.ஐ.எம்-ல் படித்திருக்கலாம். ஆனால், உங்களிடம் நடுத்தர மக்களிடம் உள்ள மனநிலை இல்லை எனில், ஹெச்.யு.எல்.லில் வேலை கிடையாது. நடுத்தர மக்கள் மட்டுமே அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து எப்போதும் சிந்திப்பார்கள். மேலும், அவர்களுக்கு பணம் குறித்த கவனம் எப்போதும் இருக்கும். இது இரண்டும் இல்லை எனில், ஹெச்.யூ.எல்.-ல் வேலையில்லை’’ என்பது எழுதப்பட்ட சட்டமாக இருந்தது.

மேலும் எவ்வளவு பெரிய படிப்பு இருந்தாலும் முதல் சில மாதங்களில் உங்களுக்கு அலுவலகத்தில் வேலை கிடையாது. மார்க்கெட்டுக்குச் செல்ல வேண்டும். கடைக்காரர்களுடன் பேச வேண்டும். அவர்கள் தங்கும் இடத்தில் தங்க வேண்டும். அவர்களுடன் ஒன்றாக இணைய வேண்டும்.

தவிர, ஹெச்.யூ.எல். நிறுவனத்தில் திறமைக்கு மதிப்பு உண்டு. முதல் பத்து வருடங்களுக்கு உங்களின் வளர்ச்சி என்பது சீராக இருக்கும். இது அரசாங்க வேலை போன்ற தோற்றம் கொடுக்கும். ஆனால், அடுத்தகட்ட வளர்ச்சி என்பது அபாரமாக இருக்கும். அதே போல, உங்களிடம் ஒரு தொழில்முனைவோருக்கான அணுகுமுறையும் திறமையும் இல்லை எனில், ஹெச்.யு.எல். நிறுவனத்தில் வேலை இல்லை.

இதுபோன்ற கொள்கைகளால்தான் ஹெச்.யு.எல். நிறுவனத்தில் வேலை பார்த்தவர் எனில், சந்தையில் பெரிய மதிப்பு இருக்கும். இதுவரை சுமார் 400-க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகளை ஹெச்.யூ.எல். உருவாக்கி இருக்கிறது. பல முக்கியமான தலைமைச் செயல் அதிகாரிகள் ஹெச்.யு.எல். நிறுவனத்தில் வேலை செய்தவர்கள்தான். ஹெச்.யூ.எல். நிறுவனத்தில் கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

ஆறு நபர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் எட்டு நபர்களுக்கு வழங்க வேண்டும். அதில் 10 நபர்கள் செய்யும் வேலையை வாங்க வேண்டும் என்பதுதான் ஹெச்.யு.எல்-லின் பாலிசி.

சஞ்சீவ் மேத்தா

ஹெச்.யு.எல்-ன் தற்போதைய தலைவர் சஞ்சீவ் மேத்தா, 2013-ம் ஆண்டு பொறுப்புக்கு வந்தார். அப்போதும் நிறுவனத்துக்கு வேறு விதமான சிக்கல்கள் இருந்தன. அப்போது பதஞ்சலி நிறுவனம் வேகமாக வளர்ந்து வந்தது. ஆறு ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டியது. இ-காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சியை ஹெச்.யுஎல் கணிக்கவில்லை. தவிர, ஒவ்வொரு பிராந்தியத்திலும் புதிய புதிய எப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் வரத்தொடங்கின. அப்போது வருமனம் ரூ.28,000 கோடி. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பெரிய தொகைதான். அப்போதும் ஹெச்.யு.எல் முக்கியமான நிறுவனம்தான், ஆனால், இதே சூழலில் இருந்தால் இந்த இடம் நிச்சயமில்லை என்பதுதான் சூழலே நிலவியது.

சஞ்சீவ் மேத்தா

மக்கள் மனதைக் கொள்ளை கொள்ள வேண்டும்!

சஞ்சீவ் மேத்தா தலைமைப் பொறுப்புக்கு வரும்போது, நிறுவனத்தைக் குறித்து ஒட்டுமொத்த தகவல்களைக் கேட்காமல் ஒவ்வொரு பிராண்டின் செயல்பாடு குறித்த முக்கியமான தகவல்களை மட்டுமே கேட்டிருந்தார். இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தாலும் மொழி, உணவுபழக்கம் என அனைத்தும் வேறுபடும். 50 கிலோ மீட்டர் சென்றால் ஒட்டுமொத்த பழக்கமும் வேறாக இருக்கும்.

அதனால் Winning in Many Indias என்னும் குழுவை உருவாக்கினார் சஞ்சீவ் மேத்தா. இதனால் உள்ளூர் தேவைக்களுக்கேற்ப பொருள்களை உருவாக்குவதல் மற்றும் அதற்கான சிறப்பு கவனம் செலுத்தத் திட்டமிட்டார். இதன் மூலம் நிறுவனத்தை வளர்க்க முடியும். தவிர, போட்டி நிறுவனங்களிடம் இருந்து தனித்துத் தெரியவும் முடியும். அதனால் இந்தியாவை 14 பகுதிகளாகப் பிரித்து பணியாற்ற முடிவெடுக்கப்பட்டது. அதனால் யாருக்கு என்ன தேவையோ அதற்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது.

அதே போல, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு குழு உருவாக்கப்பட்டது. ஹோம்கேர், லாண்ட்ரி, ஸ்கின்கேர் என குழுமத்தை 15 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவும் ஒரு பொது மேலாளர் இருப்பார். அவருக்கென மார்கெட்டிங், நிதி, டிஜிட்டல் என பிரத்யேக குழு இருக்கும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் இருக்கும் குழு மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் இருக்கும் குழு ஆகிய இரு குழுக்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றும்.

இப்படி நாட்டை பல பகுதிகளாக பிரித்தாலும் புதிய இன்னொவேஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 4 – 5 புதிய புராடக்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதே போல, புதிய பிராண்டுகள் கையகப்படுத்துவதிலும் ஹெச்.யூ.எல். கவனம் செலுத்தியது.

அப்போது இந்துலேகா பிராண்ட் தென் இந்தியாவில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை இங்கிருக்கும் குழு, ஹேர் கேர் குழுக்கு பரிந்துரை செய்து அந்த பிராண்டை ஹெச்.யு.எல். வாங்கியது. இது தவிர, ஹார்லிக்ஸ் பூஸ்ட் உள்ளிட்ட பிராண்டுகளையும் ஹெச்.யூ.எல் வாங்கியது.

R&D

கறை நல்லது…

ஹெச்.யு.எல். நிறுவனத்தில் ரூ.5,000 கோடிக்கு மேலான விற்பனையாகும் பிராண்ட் சர்ப் எக்ஸெல். ஆனால், 2005-ம் ஆண்டு இந்த பிராண்ட் பெரிய வெற்றி அடையவில்லை. பலவகையான யுக்திகளை கையாளப்பட்டும் பெரிய வெற்றி அடையவில்லை. கறையை நீக்கும், சாக்லேட் கறையை நீக்கும், இங்க் கறையை நீக்கும், ஆடையின் வண்ணம் குறையாமல் கறை நீக்கும், குறைந்த நேரத்தில் கறையை நீக்கும் என பல வகையாக யுத்திகள் செய்யப்பட்டும் பெரிய வெற்றி அடையவில்லை. அதேபோல தள்ளுபடி, குறைந்த விலையில் அதிக அளவு என எந்த மார்கெட்டிங் யுத்தியும் வெற்றி அடையவில்லை.

அப்போது பிரேசிலில் குழந்தை வளர்ப்பு குறித்து தெரியவர, குழந்தைகள் விளையாடும்போது அழுக்கு இருந்தால்தான் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என அம்மாக்கள் கருதினார்கள். அதனால் அந்த ஐடியாவில் இருந்து கறை நல்லது என்னும் விளம்பரத்தை உருவாக்கப்பட்டது. இந்த விளம்பரத்துக்கு சர்வதேச அளவில் பல விருது கிடைத்ததுடன், ஹெச்.யு.எல். நிறுவனத்துக்கு முக்கியமான பிராண்ட் இமேஜையும் தந்து, பெரும் லாபத்தையும் தரச் செய்தது!

2013-ம் ஆண்டு ரூ1.33 லட்சம் கோடியாக இருந்த சந்தை மதிப்பு தற்போது ரூ.5.30 லட்சம் கோடியாக இருக்கிறது. சில பிராண்டுகள் தோற்றிருக்கின்றன. சில தவறுகள் நடந்திருந்தபோதிலும் எப்.எப்.சி.ஜி பிரிவில் பல முனை தாக்குதல்கள் இருந்தாலும் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துகொண்டிருக்கிறது ஹெச்யுஎல்.Source link

Leave a Reply

Your email address will not be published.