Tamil Entrepreneurs

எங்களைத்தான் மிரட்டுகிறார்கள்; ஏமாற்றியவர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்; IFS மோசடி அப்டேட் | IFS brothers are backed by politicians and police


ஐ.எஃப்.எஸ் மோசடியில் சம்பந்தப்பட்ட லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு உள்ளிட்டோர் அனைவருமே தலைமறைவாகிட்ட நிலையில், அவர்களின் அலுவலகங்கள் குடியிருந்த இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனையில் ஈடுபட்டது. இந்த ஐ.எஃப்.எஸ் மோசடியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நிறுவனத்தை நடத்திவந்தவர்கள் தலைமறைவாகிவிட்டதால், மாதந்தோறும் பணம் போட்டவர்களுக்குத் தரப்பட்டு வந்த பணம் இந்த மாதம் வரவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள் பணம் வசூலித்துத் தந்த ஏஜெண்டுகளிடம் பணம் கேட்டு நச்சரிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நச்சரிப்பு நெருக்கடி தாங்காமல், காட்பாடு சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்கிர ஐ.எஃப்.எஸ் ஏஜெண்ட் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்துகொண்ட வினோத்குமார் எழுதிய கடிதம்

தற்கொலை செய்துகொண்ட வினோத்குமார் எழுதிய கடிதம்

ஐ.எஃப்.எஸ் ஏஜெண்டிடம் பணம் தந்து ஏமார்ந்த காஞ்சிபுரம் கோனேரிக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் தந்தார். அவர் தந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிய அவருடன் பேசினோம். அவர் எங்களிடம் சொன்னதாவது:

“எங்களிடம் பணம் வாங்கிய ஏஜெண்டுகள் யாரும் இப்போது அவர்களுடைய வீட்டில் இல்லை. எங்கேயோ தலைமறைவாகி விட்டார்கள். வீட்டில் இருக்கும் பெண்களும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது என்று எங்களிடம் கத்துகிறார்கள்.



Source link

Leave a Reply

Your email address will not be published.