Memes
oi-Jaya Chitra
சென்னை: மற்ற நாட்களையெல்லாம் விட இந்த ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் வேகமாக முடிந்து விடுகிறதே என மீம்ஸ் போட்டு ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை (சிலருக்கு சனி வரை) மெல்ல மெல்ல ஊர்ந்து ஊர்ந்து கடிகாரம் நகர்வது மாதிரி இருக்கும். ஒவ்வொரு மணியையும் அலுவலகத்தில், பள்ளி, கல்லூரிகளில் நகர்த்துவதே கஷ்டமாக இருக்கும். எப்போதுதான் வார இறுதிநாட்கள் வருமோ என திங்கள் காலையிலேயே மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை வந்து விட்டாலே சனி, ஞாயிறை நினைத்து மனதில் சந்தோசம் வந்து தானாகவே ஒட்டிக் கொள்ளும். அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும்.. இல்லையென்றால் எதுவுமே செய்யாமல் படுத்து தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என ஆளாளுக்கு ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.

ஆனால் கண்ணை மூடித் திறப்பதற்குள் ஞாயிறு முடிந்து விட்டது போல் ஓடி விடும். ஞாயிறு மாலையே அடுத்த நாள் திங்கட்கிழமை என்ற கவலை வந்து ஒட்டிக் கொள்ளும். நெட்டிசன்கள் தங்களது இந்தக் கவலையை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு கிடைத்தது அனுமதி – முதலமைச்சருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…





English summary
Funny memes collection on sunday 01-05-2022
Story first published: Sunday, May 1, 2022, 21:26 [IST]