Memes
oi-Jaya Chitra
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் ‘இங்கி பிங்கி பாங்கி..’ போட்டு, ஓஎம் ஆர் ஷீட்டை நிரப்பியவர்களை மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
எப்படியும் அரசு வேலையை பெற்றே தீர்வது என இரவுப் பகலாக தேர்வுக்காகப் படித்தவர்களைப் போலவே, ‘வேற வழி இல்லப்பா.. வீட்ல ரொம்ப கம்பெல் பண்றாங்க..’ என கட்டாயத்தின் பேரில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களும் அதிகம். நன்கு படித்தவர்களுக்கே தேர்வு என்றால் வயிற்றுக்குள் கொஞ்சம் பட்டாம்பூச்சி பறக்கத்தான் செய்யும், அப்போது படிக்காதவர்களின் மனநிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

தெனாலி கமல் மாதிரி அவர்களுக்கு, ‘தேர்வு மையத்தைப் பார்த்தால் பயம்.. வினாத்தாளைப் பார்த்தால் பயம்.. அவ்வளவு ஏன் பக்கத்தில் அமர்ந்து தேர்வு எழுதுபவர்களைப் பார்த்தாலும் பயம்..’ என மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். சமயங்களில் நன்றாக படித்தவர்களுக்கேகூட ஒரே மாதிரி இரண்டு விடைகளைப் பார்த்ததும் லைட்டாக சந்தேகம் வந்துவிடும், அதில் எது சரியானதாக இருக்கும் என.. அப்படிப்பட்டவர்களுக்கு, ‘இங்கி பிங்கி பாங்கி..’ தான் ஒரே வழி என சைடு கேப்பில் அவர்களையும் ஜாலியாக கலாய்ச்சிபை செய்துள்ளனர் மீமர்கள்.
இதோ, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…











English summary
These are some funny memes collection on TNPSC Exam.
Story first published: Sunday, July 24, 2022, 18:06 [IST]