Tamil News

எல்பின் நிதி நிறுவன மோசடி – ஏமாற்றியவர்களை தேடி பிடித்து கட்டிவைத்து தாக்குதல் | elfin finance trichy issue – Attack on cheaters


திருச்சியை தலையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த எல்பின் நிதிநிறுவன பங்குதாரர்களில் ஒருவர் அழகிரிசாமி என்கின்ற ராஜா. ‘அறம் மக்கள் அறக்கட்டளை’ என்ற பெயரில் சமூக சேவகர் போல போர்வை போற்றிக்கொண்டு மோசடிகளில் ஈடுபடுவதுதான் ராஜாவின் முழு நேரப் பணி. இவரும் இவர் சகோதரர் ரமேஷும் சேர்ந்தும், தங்கள் நிதி நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால், பத்து மாதத்தில் இரண்டு மடங்காக திரும்பி தரப்படும் என்று புருடா விட்டு பொதுமக்களுக்கு வலைவிரித்தனர். அதை நம்பி, ஏராளமான முதலீட்டாளர்கள் எல்பின் நிதிநிறுவனத்தில் பணத்தை போட்டனர்.

எல்பின் நிதிநிறுவனம்,நிதிநிறுவனம்,எல்பின்,திருச்சி,எல்பின் நிதிநிறுவனம்,சமூக சேவகர் ராஜா,அழகிரிசாமி என்கின்ற ராஜா,400 கோடி மோசடியில்,400 கோடி ரூபாய் மோசடி,மோசடி மன்னன் ராஜா,பணம் மோசடி,

ஆனால் சொன்ன நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. அப்போதுதான் தெரியவந்தது, சமூக சேவகர் ராஜா, ஒரு மோசடி மன்னன் என்று.  முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 400 கோடி ரூபாய் வரை மொத்தமாக சுருட்டி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பான புகாரில் ராஜா, அவரது சகோதரர் ரமேஷ் உள்ளிட்ட 18 பேர், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது சொத்துக்களை வழக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, 14க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் சிக்கி, சிறையில் இருக்கும் ராஜா, ரமேஷ் கும்பல், ஜாமீன் பெற்று வெளியில் வருவதற்கு திண்டாடி வருகின்றனர். 

எல்பின் நிதிநிறுவனம்,நிதிநிறுவனம்,எல்பின்,திருச்சி,எல்பின் நிதிநிறுவனம்,சமூக சேவகர் ராஜா,அழகிரிசாமி என்கின்ற ராஜா,400 கோடி மோசடியில்,400 கோடி ரூபாய் மோசடி,மோசடி மன்னன் ராஜா,பணம் மோசடி,

அதனைத் தடுப்பதற்கும், பறிகொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கும், ‘புரட்சி குழு’ என்ற பெயரில், தனிக்குழு ஒன்று உருவாகிப் பாதிக்கப்பட்டவர்களே களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளதாக, ஆடியோ ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. மோசடி செய்த பணத்தை ராஜா கும்பல், பல்வேறு ஊர்களில் உள்ள உறவினர்களின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், ராஜாவை ஜாமீனில் எடுக்க அவரது உறவினர்கள் பலரும் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் தப்பித்து, வெளியே சுதந்திரமாக சுற்றி திரியும், மோசடி மன்னன் ராஜாவின் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு தற்போது பணத்தைப் பறிகொடுத்தவர்களால் பிரச்சினை தலையெடுத்துள்ளது. 

எல்பின் நிதிநிறுவனம்,நிதிநிறுவனம்,எல்பின்,திருச்சி,எல்பின் நிதிநிறுவனம்,சமூக சேவகர் ராஜா,அழகிரிசாமி என்கின்ற ராஜா,400 கோடி மோசடியில்,400 கோடி ரூபாய் மோசடி,மோசடி மன்னன் ராஜா,பணம் மோசடி,

அப்படி சிக்கிய ஒருவரைதான், கட்டி வைத்து வாயில் துணியை வைத்து, கால்களை விரித்து அடித்துத் துவைத்து ஆக்‌ஷோரத்தை காட்டியுள்ளனர். இதற்கிடையே, மோசடி மன்னன் ராஜாவை வெளியே வந்தால் சிறை வாசலிலேயே வைத்து செமத்த அடி கொடுத்து, பணத்தைப் பிடுங்குவோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கர்ஜித்து வருகின்றனர். 

எல்பின் நிதிநிறுவனம்,நிதிநிறுவனம்,எல்பின்,திருச்சி,எல்பின் நிதிநிறுவனம்,சமூக சேவகர் ராஜா,அழகிரிசாமி என்கின்ற ராஜா,400 கோடி மோசடியில்,400 கோடி ரூபாய் மோசடி,மோசடி மன்னன் ராஜா,பணம் மோசடி,

மேலும் படிக்க | கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு

எல்பின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளவர்களுக்கு, அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளைப் பொருளாதார குற்றப்பிரிவினர் முடக்கி, பணத்தை இழந்தவர்களுக்குத் திரும்ப கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அதற்குள்ளாகப் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கான தண்டனை அதிகப்படியானது – வேதனைப்படும் சீமான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.