Memes
oi-Jaya Chitra
சென்னை: வெயில் கொளுத்த வேண்டிய அக்னி நட்சத்திர நாட்களில் மழை கொட்டி வருவது பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இணையத்தை குளிர வைத்து வருகின்றன.
மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே இந்தாண்டு வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டதால், மே மாதம் அக்னி நட்சத்திரத்தை நினைத்து மக்கள் பயத்தில் இருந்தனர். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக்பாஸ் மாதிரி, வாட்டி வதைக்கப் போகிறது என எதிர்பார்க்கப்பட்ட அக்னி நட்சத்திர நாட்களில் மழை கொட்டி, பூமியையும், மக்கள் மனதையும் குளிர வைத்து வருகிறது.

இது மே மாதமா இல்லை நவம்பர், டிசம்பரா என மக்கள் அடிக்கடி காலண்டரை எடுத்துப் பார்க்கும் வகையில், மழை தூறிய வண்ணமாகவே உள்ளது. வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி, ‘சட்டென மாறிய வானிலை..’ என மழையை கொண்டாடி வருகின்றனர் மக்கள்.
ஆனால் இந்தக் கொண்டாட்டமும், குதூகலமும் எல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்குத்தான். வெளியில் வேலைக்கு என செல்பவர்கள், வெயிலைத் திட்டிய மாதிரியே இப்போது மழையையும் திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இப்டி நசநசனு பேய்ஞ்சுகிட்டே இருந்தா வெளில எப்டி போகுறதாம்..?’ என தங்களது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆக, அக்னி நட்சத்திர காலத்தில் பெய்து வரும் இந்த மழை, ஒருபக்கம் பாராட்டுகளையும், மறுபுறமும் வசவுகளையும் சமமாகவே பெற்று வருகிறது. மீமர்கள் நடுநிலைவாதிகளாக இந்த இருதரப்பு வாதங்களையும் வைத்து வழக்கம்போல், ஜாலியாக மீம்ஸ்களைப் பொழிந்து வருகின்றனர்.

இதோ அவற்றில் சில உங்களுக்காக…
English summary
These are some jolly memes collection on Rain in summer.
Story first published: Thursday, May 12, 2022, 18:26 [IST]