Tamil Entrepreneurs

ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகளாக வேலை செய்யும் முதியவர்.. தோனியை விட கூலா இருக்காருப்பா!


ஒரு நிறுவனம் அல்லது ஒரு கம்பெனியில் நீங்கள் அதிகப்பட்சமாக எத்தனை ஆண்டுகள் வேலை செய்து உள்ளீர்கள்? என்று கேட்டால், நம்மில் பலரும் விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்டுகளே சொல்வோம்; அதாவது 10க்குள் (ஆண்டுகளுக்குள்) ஏதாவது ஒரு நம்பரை சொல்லுவோம்; சிலர் விதிவிலக்காக 10க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து இருப்பார்கள், அதிலும் அரசாங்க உத்தியோகம் அல்லது சொந்த வியாபாரம் என்றால் சொல்லவே வேண்டாம். நிச்சயமாக ‘டபுள் டிஜிட்’ நம்பரையே சொல்லுவார்கள்; அதாவது 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் என்கிற இரட்டை இலக்க எண்களையே சொல்லுவார்கள்.

ஆனால் பிரேசிலைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேனுக்கு, அவரது பணியிடத்துடனான தொடர்பு மிகவும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.100 வயது மிக்க வால்டர் ஆர்த்மேன் ஒரே நிறுவனத்தின் கீழ் 84 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இதுவொரு உலக சாதனையும் ஆகும். ஆம்! இந்த ​​100 வயது மிக்க முதியவர், “ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை செய்தவர்” என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்!

கின்னஸ் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Guinness World Records – GWR) ஆனது வால்டர் ஆர்த்மேனின் கதையை ஆவணப்படுத்தும் வலைப்பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. 1938 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் பிரேசிலில் உள்ள சான்டா கேடரினாவில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ​​நிறுவனத்தில் ‘ஷிப்பிங் அசிஸ்டென்ட்’ ஆக பணியாற்றத் தொடங்கிய வால்டர் ஆர்த்மேன், தன் கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் உதவியுடன் மெல்ல மெல்ல தனக்கான வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார். இப்படியாக 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து, இன்று அவர் நம்மில் பலருக்குமான ப்ரொஃபெஷனல் இன்ஸ்பிரேஷனாக உருமாறியுள்ளார்!

also read : குதிரை எந்த திசையில் நடப்பது போல் தெரிகிறது? இதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கூறலாம்..

மேலும் இந்த 2022 ஆம் ஆண்டில், அவர் 100 வயதை எட்டியபோது தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு பெரிய மைல்கல்லை கடந்தார். இதனொரு பகுதியாக அவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது சக ஊழியர்களுடன் சேர்ந்து தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

also read : 90’ஸ் கிட்ஸ்களின் பர்த்டே பார்ட்டி இப்படிதான் இருக்கும்! வைரலாகும் புகைப்படம்..

“நான் அதிகம் திட்டமிடுவதும் இல்லை, நாளையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதும் இல்லை. நான் கவலைப்படுவது எல்லாம், நாளை என் வாழ்வில் மேலும் ஒரு நாளாக இருக்க வேண்டும், அதில் நான் எழுந்து, உடற்பயிற்சி செய்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பது மட்டுமே. நீங்கள் நிகழ்காலத்தில் பிஸியாக இருக்க வேண்டும், கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ அல்ல. எப்போதுமே ‘இன்று’ தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, வேலைக்குச் செல்வோம்!” என்று கூலாக பேசுகிறார் வால்டர் ஆர்த்மேன்.

மேலும் “நான் ஒரு சாதனையை முறியடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும் கூட, திரும்பிப் பார்க்கும்போது, ஒரே நிறுவனத்தில் மிக நீண்ட காலமாக வேலை செய்தவர் என்கிற பட்டத்தை வைத்திருப்பதை ஒரு பெருமைக்குரிய சாதனையாக கருதுகிறேன்” என்றும் வால்டர் கூறி உள்ளார்.

சரி, வால்டர் ஆர்த்மேனின் கதையும், கருத்துக்களும் ஒருபக்கம் இருக்கட்டும். நீங்கள் எத்தனை ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்!

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published.