Tamil Entrepreneurs

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிறந்த அழகான குழந்தை..!- மருத்துவ மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்


28 வயதான கர்ப்பிணிக்கு ஓடும் ரயிலில் பிரசவ வலி வந்து அங்கேயே பிரசவம் பார்த்து குழந்தை பிறந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

மருத்துவர்களை எப்போதும் கடவுளுக்கு நிகராக கூறுவார்கள். அந்த வகையில் ஆந்திராவில் உள்ள GITAM மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர் ஓடும் ரயிலில் தன்னுடன் பயணித்த சக பயணிக்கு எதிர்பாராத விதமாக பிரசவ வலி வரவே சுவாதி அங்கு மருத்துவராக செயல்பட்டு அந்த கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நல்ல முறையில் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் டூரண்டோ விரைவு ரயிலில் 28 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென்று எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண்ணின் கணவர் மற்றும் சுற்றி இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்பொழுது அதே ரயிலில் சுவாதி என்ற இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் மாணவியும் பயணம் செய்துள்ளார். ரயிலில் ஒரு மருத்துவர் பயணம் செய்வதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் உடனடியாக சுவாதியின் உதவியை நாடியுள்ளார்.

Also Read: தென் மாநிலங்களில் உடல் பருமன் கொண்ட பெண்கள் அதிகம் : அதில் தமிழ்நாடு முதலிடம்..!

இதைக் கேட்டு உடனடியாக செயல்பட்ட சுவாதி அந்த பெண்ணிற்கும் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக பிரசவம் பார்த்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளார்.

இதைப் பற்றி சுவாதியிடம் கேட்டபோது, ‘இது நான் சற்றும் எதிர்பாராமல் நடந்த சம்பவம். உண்மையில் இதற்கு முன்னர் மருத்துவ பயிற்சியின் போது என்னுடைய சக ஆசிரியர்கள் பிரசவம் பார்க்கும் வேளையில் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறேன்.

ஆனால் நானே முழுவதுமாக ஒரு பிரசவத்தை பார்த்தது இதுவே முதல் முறை என்பதால் சற்று கவலையுடனும் அதே சமயத்தில் படபடப்புடனும் இருந்தேன். அந்த பெண்ணிற்கு பத்து மாதங்கள் முடிவதற்கு முன்னதாகவே குழந்தை பிறந்து விட்டது. எது எப்படியோ நான் முடிந்த வரையில் சிறப்பாக பணியாற்றி தாயையும் குழந்தையையும் காப்பாற்றி விட்டேன். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இந்த பிரசவம் நடைபெற்றது’ என்று தெரிவித்தார்.

சுவாதி  ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் வசித்து வருகிறார். அங்குள்ள GITAM மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பை முடித்துவிட்டு தற்போது GIMSR ல் மேற்படிப்பை படித்து வருகிறார்.

சுவாதியின் தைரியமான மனிதநேயமிக்க செயலை பாராட்டிய அவரது GITAM கல்லூரி பேராசிரியர் கீதாஞ்சலி பத்மநாபன் என்பவர் தான் இத்தகவலை ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே இந்த செய்தி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி பலரது பாராட்டையும் பெற்றது.

 

மேலும் GIMSR கல்லூரியின் ட்விட்டர் பக்கத்திலும் சுவாதியின் இந்த தைரியமான செயலை பாராட்டி பதிவிட்டுள்ளனர். அதில் “எங்கள் கல்லூரி மாணவியான சுவாதியை நினைத்து எங்களுக்கு பெருமையாக உள்ளது. ஓடும் ரயிலில் தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிக பாதுகாப்பான முறையில் சேவை செய்து இருவரையும் காப்பாற்றிய சுவாதியின் சமயோசிதமான புத்திக்கும் அவரது தைரியத்திற்கும் அவரை மனதார பாராட்டுகிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More: உக்ரைன் வானில் ஏலியன் யூஎப்ஓ?..வானியல் ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சுவாதியின் உதவியினால் குழந்தை பெற்றெடுத்த அந்த தம்பதி, சுவாதியை கவுரவிக்கும் விதமாகவும், நன்றி செலுத்தும் விதமாகவும் பிறந்த அந்த குழந்தைக்கு சுவாதியின் பெயரை வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published.