டிஜிட்டல் சகாப்தம் நிச்சயமாக எல்லாவற்றையும் மாற்றிவிட்டது போல் ஓவியங்களும் இந்த மாற்றத்திலிருந்து தப்பவில்லை என்று தான் கூற வேண்டும். பாரிசியன் கலைஞரான லூகாஸ் வாஸ்காங்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “எனது கலைப்படைப்பின் உண்மையான விடியோ இங்கே.. எல்லையற்ற பல கதைகளை கண்டறிய காத்திருங்கள்“ என்ற மெசேஜோடு வீடியோ ஒன்றை டிவிட் செய்துள்ளார்.
The original video of my artwork here.
Stay tuned, to discover more infinite stories! pic.twitter.com/4J4pPXUd49
— Vaskange (@Vaskange) July 26, 2022
வீடியோ தொடக்கத்தில், ஒருவர் சிறிய அறைக்குள் அமர்ந்து ஓவியம் வரைவது போன்று தோன்றுகிறது. அதில் உள்ள சின்ன புகைப்படத்தை கிளிக் செய்தால் உள்ளே புதிய ஒவிய கதைகளைக் காணமுடிகிறது. அந்த பக்கத்தில் உள்ள சிறிய ஜன்னலை கிளிக் செய்து பார்த்தால் அதில் இருந்து ஒரு ரயில் கடந்து செல்வதாகவும், அதனுள் பயணி ஒருவர் அமர்ந்திருப்பது போன்று தெரிகிறது. பின்னர் அதனைத் தொடர்ச்சியாக ஜூம் செய்துக்கொண்டே செல்லும் போது, புதிய புதிய ஓவியங்களை நம்மால் காணமுடிகிறது. குறிப்பாக இதற்கு எந்த முடிவும் இல்லை.. எவ்வளவு ஜும் செய்தாலும் சென்று கொண்டே இருக்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்துள்ளது.
Also Read : பபுள் கம்மை மென்று ரூ.67,000-க்கும் மேல் சம்பாதிக்கும் இளம்பெண் – எப்படி தெரியுமா?
டிவிட்டரில் பதிவிட்ட இந்த வீடியோ இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோவை டிவிட் செய்த முஸம்மில் ஷெரீஃப் என்ற ட்விட்டர் யூசர், இந்த கலைப்படைப்பு பிக்சல்களால் உருவாக்கப்படவில்லை, மாறாக வெக்டார் தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மற்றொரு யூசர் வியப்பின் உச்சம், விஞ்ஞான உலகில் ஓவியத்தை இத்தனை அழகாகவும் வியப்போடும் காண்பிக்க முடிகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் வாஸ்காங்கேவின் பணி பலரின் மனதைக் கவர்வதோடு, அவர்கள் இதற்கு முன் இவ்வளவு ஆழமான திசையன் கலையைப் பார்த்ததில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது புதிய தொழில்நுட்பத்தின் புத்திசாலித்தனமான பயன்பாடு எனவும் இது பல எண்ணற்ற அற்புதமானப் படைப்புகளுக்கு நிச்சயம் வழிவகுக்கும். குறிப்பாக இந்த டிஜிட்டல் ஓவியங்கள் மக்களை இரண்டாவது பரிமாணத்திற்கு அப்பால் அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை..குறிப்பாக டிஜிட்டல் சகாப்தம் மக்களுக்கு இதுப்போன்று ஆரோக்கியமான விஷயங்களை எடுத்துச்சென்றால் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் வரும் தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.