Tamil Entrepreneurs

கள்ள உறவில் ‘பொம்மை புருஷர்’.. பொம்மையை திருமணம் செய்துவிட்டு புலம்பும் பெண்.. குழப்பத்தில் இணையவாசிகள்!


“காதல் விநோனமானது, காதலுக்கு கண்கள் இல்லை, காதல் யாருக்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்ற வார்த்தைகளை நம்மில் நிச்சயம் அனைவரும் கேட்டிருப்போம். இங்கு முற்றிலும் வித்தியாசமாக ஒரு பொம்மையைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டதோடு, அதே போன்ற பொம்மையையும் குழந்தையாக பெற்றெடுத்துள்ளார் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 37 வயதான பெண்மணி. அதை விட சுவாரஸ்யம் என்னவென்றால், பொம்மை கணவர் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? ஏன் பொம்மைத் திருமணம் செய்தார்? என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்களை நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோமா?….

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் 37 வயதான பெண்மணி மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ். இவர் நடனமாட தனக்கு ஒரு பார்டனர் இல்லை என்ற மனம் வேதனைப்பட்ட சமயத்தில், இவரது தாய், வீட்டிலிருக்கும் பழைய கந்தல் துணிகளை ஒன்றாகத் தைத்து ஒரு பொம்மை உருவாக்கியுள்ளார். அதற்கு மார்செலோ என்று பெயரிட்டு தன்னுடைய மகளுக்கு புதிய உறவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்த நாள் முதல் தன்னுடைய நண்பர் போன்று பொம்மையுடன் பழகி வந்துள்ளார் மோரேஸ். இந்த நிலையில் தான் மார்செலோ என்ற பொம்மையால் தான் தன்னுடைய வாழ்க்கை முழுமையானது என்று நினைத்தோடு அதைத் திருமணம் செய்துக் கொள்ளவும் முன்வந்தார்.

அனைவரின் ஆதரவோடு கடந்த 2021 டிசம்பரில் திருமணம் செய்துக் கொண்டார். அப்போது “ பொம்மை வாக்குவாதம் செய்யாது, சண்டை போடாது .. என்னைப்புரிந்துக் கொள்ளும் கணவர் தான் வேண்டும்“ என்று தெரிவித்தக் கருத்து கடந்தாண்டு இணையத்தில் வைரலானது. இதனையடுத்து எங்களின் வாழ்வில் புதுவரவு வந்துள்ளதாக கூறி வீட்டில் நர்ஸ் மற்றும் மருத்துவர்கள் உதவியோடு மார்செலோ போன்றே குழந்தைப் பொம்மையை சோசியல் மீடியாவின் வாயிலாக நேரலையில் அறிமுகம் செய்தார். அப்போதும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களையும், பல்வேறு எதிர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

7,80,0000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து சாப்பிட்ட மனிதர்கள் – தொல்லியல் ஆய்வில் வெளியான ஆச்சரியம்!

இந்த சூழலில் தான், மெர்சேலோ என்ற பொம்மையுடன் திருமணமாகி ஓராண்டை நிறைவு செய்யவுள்ள நிலையில், இந்த வாழ்க்கை எல்லாவற்றையும் போல தன்னையும் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதில், தான் தன்னுடைய பொம்மை மகனுடன் மருத்துவமனையில் இருந்த நேரத்தில், மெர்சேலோ தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதைத் தெரிந்துக் கொண்டார்.

சந்கேதத்தின் பேரில் செல்போன்களை ஆய்வு செய்த போது உறுதியானது எனவும், இதனால் தன்னுடைய பொம்மைக் கணவரை விட்டு பிரிந்து வாழ முடிவு எடுத்துள்ளார் மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ். இதோடு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் குழந்தையின் நலனைக்கருதி இருவரும் சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளதாகவும் பொம்மையைத் திருமணம் செய்துக்கொண்ட மோரேஸ் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை 8 பில்லியன்… ஆனால் நான் இன்னும் சிங்கிள்.. தெறிக்கவிடும் 90’ஸ்

என்ன இருந்தாலும் தங்களின் வாழ்க்கையை இனி வரும் மகிழ்வோடு வாழ முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்த இவர்களுக்கு அடுத்த மாதம் முதல் திருமண நாள் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதிவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள்  என்னடா இது என மண்டையை பிய்த்துக்கொண்டுள்ளனர். கிறுக்கனத்தனமான செயல்களை என்கிரேஜ் செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published.