கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைவதோடு பாதிப்பையும் தீவிரமாக்குகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு வெளியே டெல்டா பிளஸ் என்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வகை காரணமாக ஊரடங்கை நீட்டிக்க ஒருசில நாடுகள் யோசித்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, டெல்டா பிளஸ் வகை, இந்தியாவில் உள்ள தடுப்பூசிகளின் வீரியத்தை குறைக்கக்கூடும் என்று தெரிவித்தார். ஆனாபோதும், இந்த தடுப்பூசிகள் டெல்டா பிளஸ் வகைக்கு எதிராக வீரியமிக்கவையாகவே இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க: பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி: காங்கிரஸ் தலைவர்களுக்கு மர்ம நபர்கள் வலை…
டெல்டா பிளஸ் வகையால் குறைந்த பாதிப்புகளே உறுதி செய்யப்பட்டுள்ளதால், கவலையளிக்கக் கூடியதாக டெல்டா பிளஸ் வகை இல்லை என்று தெரிவித்துள்ள ரன்தீப் குலேரியா, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் உயிரிழப்பையும் தீவிர பாதிப்பையும் கட்டுப்படுத்துவதே தங்களின் இழக்கு என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிரிட்டனில் 62 பேர் முதல் தடுப்பூசியையும், 44 பேர் இரண்டு தடுப்பூசியையும் செலுத்திக்கொண்ட நிலையில், மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக அவர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிப்பது, உயிரிழப்பு போன்ற தீவிர பாதிப்பில் இருந்து தடுப்பூசி நிச்சயம் பாதுகாக்கும். ஆனால் அவை கொரோனாவால் நீங்கள் பாதிக்கப்படுவதை தடுக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் விரைவாக குணமடையலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஸ்டூல் மூலம் தற்காப்பு: 4 போலீசார் சஸ்பெண்ட்…
கோவிஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிக்கு இடையேயான கால அளவு அதிகரித்திருப்பது தொடர்பான விவகாரத்தில், நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி) மேற்கொண்ட ஆய்வில், இந்த காலத்தாமதம் கொரோனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவது தெரிய வந்ததாக குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.