தோழியே காதலியானால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற கதைகளையும் படங்களையும் நிறைய பார்த்திருப்போம். ஆனால் காதலியாக முடியாது என்று மறுத்த தோழியிடம் இருந்து 24 கோடி நஷ்ட ஈடு கேட்ட நண்பனை எங்காவது பார்த்திருக்கிறீர்களா.. அப்படி ஒரு சம்பவம் தான் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த கவுஷிகன் மற்றும் நோரா டான் ஷு மெய் இருவரும் 2016 இல் சந்தித்துள்ளனர். அதன் பின்னர் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர். தொழில் சார்ந்த உதவிகளையும் ஒருவருக்கு ஒருவர் செய்துள்ளனர். சிறிது நாள் கழித்து கவுஷிகனுக்கு நோரா மீது காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கவுஷிகன் தனது காதலை நோராவிடம் வெளிப்படுத்தியுள்ளார். அனால் அந்த பெண் கவுஷிகன் மேல் அப்படி ஏதும் எண்ணம் தோன்றாததால் மறுத்துவிட்டார். பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் இதையே பிரச்சனைகள் வர தொடங்கியது. ஒவ்வொரு முறையும் தனது காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் நோரா கவுஷிகனை எப்போதும் அந்த கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை என்று உறுதியாக கூறியுள்ளார். சண்டை வளர்ந்து நோரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கவுஷிகன் தீர்மானித்தார். அதற்கு முன்னர் இருவரும் ஒருமுறை மருத்துவர் ஆலோசனை பெற எண்ணி மருத்துவரை அணுகினர்.
இருவரும் ஒன்றரை ஆண்டுகள் மருத்துவர் ஆலோசனை பெற்றும் கவுஷிகன் மனம் மாறவில்லை. நோராவிற்கும் கவுஷிகன் மீது காதல் வரவில்லை. அதனால் கோபமடைந்த கவுஷிகன் நோரா மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளார். அதன்படி தனது எண்ணங்களுக்கு மதிப்பு அளிக்காமல், மனஉளைச்சலுக்கு ஆளாகியதற்காகவும், தனது தொழில் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் கூறி வழக்கு பதிந்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் அதற்கு இழப்பீடாக நோராவிடம் இருந்து 3 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 24 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இந்த வழக்கின் விடரனை அடித்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.