Tamil Entrepreneurs

கார்கில் வெற்றி தினம்.. சியாச்சின் பள்ளத்தாக்கு போரின் நினைவுகள்..


கார்கில் விஜய் திவாஸ் அல்லது கார்கில் வெற்றி தினம் என்பது ஜூலை 26, 1999 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வரலாற்று வெற்றியின் கொண்டாட்ட தினமாகும்.

இந்திய ராணுவம் கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) இந்தியப் பகுதியில் ஒருமலை உச்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் படைகளை வெற்றிகரமாக அகற்றியது. இந்த வெற்றியை கொண்டாட, இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. அந்த சம்பவத்தின் சில நினைவுத் துளிகள் இதோ..

பாகிஸ்தான் தனது துருப்புக்களையும் துணை ராணுவப் படைகளையும் ‘ஆபரேஷன் பத்ர்’ எனும் திடத்தின் கீழ் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இந்தியப் பகுதிக்கு அனுப்பியது. காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டது. காஷ்மீர் மக்களை காக்க பாகிஸ்தானின் எந்த நிபந்தனைகளையும் இந்தியா ஏற்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது.

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் புதிய திட்டம்

கார்கில் போர் மே 8, 1999 முதல் ஜூலை 26, 1999 வரை நடைபெற்றது. கார்கிலைப் பாதுகாக்க சிறப்புப் படைகளுடன் கிட்டத்தட்ட 30,000 துருப்புக்கள் கார்கில்-திராஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். 527 வீரர்கள் இந்த போராட்டத்தின்போது உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்த நிலைகளை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கியது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் அப்போதைய ராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தான் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மஹ்மூத் அஹ்மத் மற்றும் மேஜர் ஜெனரல் ஜாவேத் ஹசன் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் அஷ்ரப் ரஷீத் ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.பாகிஸ்தானின் அப்போதைய பிரதமராக நவாஸ் ஷெரீப் விளங்கினார்.

ஜூலை 26, 1999 அன்று பாகிஸ்தான் துருப்புக்கள் யாவும் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது இந்தியாவுக்கு ஆதரவாக போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

கார்கில் மலையைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, கேப்டன் விக்ரம் பத்ரா, கேப்டன் கெய்ஷிங் கிளிஃபோர்ட் நோங்ரம் போன்ற வீரர்களுக்கு மரணத்திற்குப் பின் பரம் வீர் சக்ரா மற்றும் மகாவீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தி வருகிறார். லடாக்கின்  ட்ராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் நினைவிடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். ஓய்வு பெற்ற மற்றும் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் வீர வணக்கத்தை செலுத்தித் செல்வர்.

நேற்று இந்தியாவின் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற திரௌபதி முர்மு அவர்கள் தனது அலுவல் ட்விட்டர் பக்கத்தில் கார்கில் வெற்றி தினம் குறித்து பதிவிட்டுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published.