Tamil Entrepreneurs

கால் நூற்றாண்டு கடந்த 5 லார்ஜ் கேப் ஃபண்ட்கள்: வருமானம் எப்படி? | 5 Large Cap Funds of the Past Quarter Century: How Are the Returns?


இதர ஃபண்ட்களின் வருமானம் சுமார் 10% தொடங்கி 20 சதவிகிதம் வரைக்கும் உள்ளது. இதில் முதல் இடத்தில்  ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் 19.50 சதவிகித வருமானத்துடன் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே ஹெச்.டி.எஃப்.சி, டாப் 100 ஃபண்ட் 19% மற்றும் யு.டி.ஐ மாஸ்டர்ஷேர் ஃபண்ட் 17.45% உள்ளன. 

என். விஜயகுமார், இயக்குநர்,  https://www.click4mf.com/

என். விஜயகுமார், இயக்குநர், https://www.click4mf.com/

யு.டி.ஐ மாஸ்டர்ஷேர் ஃபண்ட் (UTI Mastershare Fund): லார்ஜ் கேப் ஃபண்ட்களில் மிகவும் பழைய ஃபண்ட் அதாவது இந்தப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஃபண்ட் ஆகும். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 17.45% வருமானம் கொடுத்துள்ளது.   இந்த ஃபண்ட் மொத்தம் 10,570 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது.

ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட்  (Franklin India Bluechip Fund):  இந்த ஃபண்ட் கடந்த 1993 –ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் ரூ. 6,574 கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 19.50% வருமானம் கொடுத்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி, டாப் 100 ஃபண்ட் (HDFC Top 100 Fund): ஆரம்பத்தில் இந்த ஃபண்டின் பெயர் ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 ஃபண்ட் என இருந்தது. கடந்த 26 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 19% வருமானம் கொடுத்து வருகிறது. இந்த ஃபண்ட் மூலம் ரூ. 22,306 கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published.