Tamil Entrepreneurs

கிஃபட் பாக்ஸை திறந்து பார்த்த சிறுவனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. ஆனந்த கண்ணீரில் மூழ்கிய தருணம்


எத்தனை உறவுகளை நாம் கடந்து சென்றிருந்தாலும் உடன்பிறந்த சகோதரர் மற்றும் சகோதரிகளின் உறவுகளை ஈடு செய்ய உலகில் எதுவும் கிடையாது. அந்தளவிற்கு உன்னதமான உறவு. சிறு வயதில் நம்முடன் விளையாடுவதற்கு, சண்டையிடுவதற்கு, சோகத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு என நம்முடனே தோழனாய், பாதுகாவலனாய் வருகின்ற உறவு இது தான். இந்த உறவைப் பற்றி பேசும் போதே அவர்களுடன் எத்தனை சண்டை சச்சரவுகள் இருந்தாலும், சிறு வயது நினைவுகளைச் சற்று யோசிக்கும் போதே கண்களில் கண்ணீர் வரத்தான் செய்யும்.

தன்னுடைய வீட்டில் இன்னொரு உறவு வரப்போகிறது அதிலும் தான் அண்ணன் ஆகிறப் போகின்ற தருணத்தை நம் பெற்றோர்கள் கூறும் போது அளவுக்கடந்த சந்தோஷம் ஏற்படும். அப்படியொரு தருணத்தை சந்தித்த ஒரு சிறுவன், சந்தோஷப்படுவதற்கு முன்னதாக ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

இன்ஸ்டகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்த வீடியோவில், சிறுவன் ஒருவர், ஒரு கிப்ட் பாக்ஸில் முன்னாடி அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் தொடங்குகிறது. என்ன தான் அந்த கிப்ட் பாக்ஸில் இருக்கிறது என்பதை அறிவதற்காக திறந்துப் பார்க்கும் போது, அல்ட்ரா ஸ்கேன் செய்த புகைப்படம் அதவாது குழந்தை கருவில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இருப்பதைப் பார்க்கிறார். சற்று நேரம் யோசித்து படத்தைப் பார்த்த உடனே, நான் அண்ணனாகிவிட்டேன் என்ற சந்தோஷத்தில் ஆழ்ந்த கண்ணீர் வரத் தொடங்குகிறது.

Read More : உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண் – பிரத்யேக வண்டியில் நகருக்குள் செல்லும் வீடியோ வைரல்!

இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாதது போன்ற எண்ணம் மனதில் தோன்றும் நேரத்தில் வெளிப்படும் முக பாவனைகள் எல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அந்தளவிற்கு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த வீடியோ ஒரிரு நாள்களுக்கு முன்னதாக பகிரப்பட்ட நிலையில் இதுவரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், இந்த வீடியோ என்னுடைய சிறு வயது நியாபகத்தை நினைவூட்டுகிறது என்றும், வாழ்த்துக்கள் அன்பே.. நீங்கள் நிச்சயம் சிறந்த சகோதரராக இருக்கப் போகிறீர்கள் என்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். மேலும் உன் பாசத்திற்கு ஈடு எதுவும் இல்லை எனவும் மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், அட நல்லவனே என்னையும் சேர்த்து அழ வைத்துவிட்டாய் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் என்ன ஒரு இனிமையான இளைஞன்? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.என்னதான் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் தன்னுடன் பிறந்தவர்களுக்கு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நினைப்பில் இன்னமும் பல உறவுகள் இருக்கத்தான் செய்கிறது என்பது தான் நிதர்சன உண்மை.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link

Leave a Reply

Your email address will not be published.