Tamil Entrepreneurs

குஜராத்துக்குப் போன செமி கண்டக்டர்… பா.ஜ.க தலைவர்கள் காரணமா? பழிவாங்கத் துடிக்கும் மகாராஷ்ட்ரா! | Semiconductor went to Gujarat… because of BJP? Maharashtra agony


எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டால் மகாராஷ்டிரா அரசுக்குத் தர்மசங்கடமான நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஏர்பஸ் மற்றும் டாடா இணைந்து போர்விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மகாராஷ்டிராவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் மகாராஷ்ட்ரா மாநில அரசு தீவிரமாக இருக்கிறது. இந்தத் திட்டத்தைப் பெற பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

டர் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டர் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இது குறித்து மாநில தொழில் துறை அமைச்சர் உதய் சாவந்த் கூறுகையில், ‘‘மகாராஷ்டிராவில் ஏற்கெனவே புனே, நாசிக், ஒளரங்காபாத், அகமத் நகர் போன்ற பகுதியில் பாதுகாப்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, டாடா போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மகாராஷ்டிராவில் தொடங்க மற்ற மாநிலங்கள் கொடுக்கும் சலுகையைவிட அதிகப்படியான சலுகைகளை மாநில அரசு வழங்கத் தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார்கள். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவாலுடன் இது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

நம் நாட்டிலேயே மகாராஷ்டிராதான் தொடர்ந்து அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 2020-22ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா 1.74 லட்சம் கோடி அளவுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது!



Source link

Leave a Reply

Your email address will not be published.