Health

குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் உயிரையே காவு வாங்குமா? எச்சரிக்கையும்.. வழிமுறையும்..!

மழை, குளிர் காலம் வந்தாலே சுடு தண்ணீரில் குளிக்கவும், குடிக்கவும் சொல்வதே வழக்கமான ஒன்றுதான். ஏனெனில், குளிர்ந்த நீரில் குளிப்பதால் ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற அபாயத்தையே ஏற்படுத்தும் என்பதாலேயே வெந்நீரில் குளிக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இருப்பினும் பலரும் குளிர்ந்த நீரிலேயே குளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளித்தால் தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது அல்லது இரத்த உறைவு காரணமாக தடுக்கப்படும் போது மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்படக் கூடும். இது ஆக்ஸிஜனின் விநியோகத்தை குறைத்து அபாயகரமான விளைவுகளையே உண்டாக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

image

குளிர்ச்சியான நீரில் குளிப்பது உங்களது எந்த அளவுக்கு பாதிக்கிறது தெரியுமா?

எதிர்பாராத சமயத்தில் திடீரென குளிர்ச்சியான நீரில் குளித்தால் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குளிர்ந்த நீர் உடலுக்கு ஷாக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இதனால் தோலில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கும், இரத்த ஓட்டம் குறையும். இதனால், உடலைச் சுற்றி இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கும்.

ஏனெனில், குளிர்ந்த நீரில் குளித்ததால் தனது 68 வயதான நோயாளி ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதோடு மூளை பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டது குறித்து மக்களுக்கு தெரிவிக்க பிரபல நரம்பியல் நிபுணரான மருத்துவர் சுதிர் குமார், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Brain #stroke caused during cold water bath in a 68-year old person with High BP

1. Winters are here and many people need to take bath in cold water. #Cold water #bathing can also be a part of cultural ritual. It is safe; however, in some cases; it can lead to serious diseases.
— Dr Sudhir Kumar MD DM (@hyderabaddoctor) November 16, 2022

குளிர் காலங்களில் பக்கவாதம் ஏற்படுவதைக் குறைப்பதற்கான வழிகள்:

மூளை பக்கவாதத்தால் இறப்புகளும், மாற்றுத்திறனாளிகளும் இந்தியாவில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்களாம்.

ஆகவே பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க, குறிப்பாக குளிர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை காணலாம்:

குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்:

எப்போதும் வெதுவெதுப்பான அல்லது சற்று மந்தமான சுடு தண்ணீரில் குளிக்கவும்.

எப்போதும் வார்ம் ஆக இருங்கள்:

வின்ட்டர் சீசனான குளிர் காலத்தில் நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்பிருந்தால், போதுமானவரை அடுக்கு ஆடைகளால் உங்களை மறைக்க முயற்சிக்கவும்.

image

சுறுசுறுப்பாக இருங்கள்:

தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யவும். ரன்னிங், ஜாகிங், ஏரோபிக்ஸ், யோகா, வீட்டு உடற்பயிற்சிகள், நடனம் அல்லது தியானம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் உடலை சூடாக வைத்திருக்கவும், ஃபிட்டாக இருக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்:

குளிர்காலத்தில் கிடைக்கும் புதிய, பருவகால பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வறுத்த, கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். சூடான உணவுகளை உண்ணுங்கள். உங்கள் தினசரி உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடல்நிலையை தவறாமல் கண்காணிக்கவும்:

நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சிறுநீரகங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் போன்ற உங்கள் மருத்துவ நிலைகளை குளிர் காலத்தில் உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.

நீங்கள் இதய நோயாளியாக இருந்தால்,கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். மது அருந்துவதைத் தவிர்க்கவும். மேலும் புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்: ஏனெனில் மற்ற நிலைமைகளைத் தவிர, புகைபிடித்தல் இதய பிரச்சனையையும் உண்டாக்குகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Leave a Reply

Your email address will not be published.