Coimbatore
oi-Rajkumar R
கோவை : கொரோனா விவகாரத்தில் இன்னும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் ‘பரபர’.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
தொடர்ந்து புதிய கோவிட் ஐ.சி.யு பிரிவு, குழந்தைகளுக்கான ஐ. சி. யு பிரிவு, இருதய நோய் பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு.மருத்துவக்குழுவினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ராதாகிருஷ்ணன் பேட்டி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய ராதாகிருஷ்ணன், “தமிழக முதல்வர் சுகாதாரத் துறைக்கு என 17 தலைப்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கர்ப்புற ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்கள் மேம்படுத்த 208 நல்வாழ்வு மையங்களை அறிவித்துள்ளார். கோவிட் காலத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்தால் கூட மருத்துவ கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பாடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு
ஜெய்க்கா திட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உடன் தீக்காய சிகிச்சை பிரிவு, குடல்நோய் துறை, நரம்பியல் துறை, எலும்பியல் துறை போன்ற துறைகள் பல்வேறு வசதிகளுடன் தயாராகி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் 32 ஹைபிரீட் ஐ சி யு படுக்கைகள் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதை இன்று பார்வையிட்டோம். தமிழ் நாட்டில் கோவிட் 100க்கு கீழே பதிவாகி வருகிறது.

கவனக் குறைவு கூடாது
கடல் கொந்தளிப்பு போல் இருந்த மூன்று அலையை நாம் தாண்டி விட்டோம். கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. மூன்று அலையைத் தாண்டி விட்டோம் நான்காவது அலையில் மாட்டிக் கொள்ளக்கூடாது. மூன்றாம் அலை பல்வேறு விழிப்புணர்வு மூலம் தடுக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாட்டில் இன்னும் தாக்கம் ஓயவில்லை. டெல்லியில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகியுள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்படும்
ஐ ஐ டி, சத்யசாய் யூனிவர்சிட்டி ஆகியவற்றில் அதிகரித்த பாதிப்பை ஜீரோ ஆக்கினோம். இது இரண்டும் நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருக்க கூடாது. தடுப்பூசியில் தமிழ் நாட்டில் 19 வயதிற்கு மேல் 94 விழுக்காட்டை எட்ட உள்ளோம். 2 வது தவணை எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் 1.29 கோடி பேர் உள்ளனர். முதல் தவணை 45 லட்சம் எடுக்காதவர்கள் உள்ளனர். பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்:” என கூறினார்.
English summary
Tamil Nadu Medical and Public Welfare Secretary Radhakrishnan has warned that we should still be vigilant in the Corona issue.
Story first published: Saturday, May 14, 2022, 0:43 [IST]