Covid-19

கொரோனா பற்றிய தேவையற்ற பதற்றத்தில் இருந்து மீள இதுவே சிறந்த மருந்து! நிபுணர்கள் டிப்ஸ்!

நம் அனைவரையும் வெவ்வேறு வழிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதித்துள்ளது. நீண்ட நாட்களாக நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த தொற்று. உடல்நலம் தொடர்பான அச்சத்தை அதிகரித்ததோடு மட்டுமின்றி, கண் முன்னே நிகழ்ந்து வரும் தொற்றின் தாக்கத்தால் ஏற்படும் இழப்புகள், அவஸ்தைகள் என உணர்ச்சி ரீதியாக நம் மனதையும் வெகுவாக பாதித்துள்ளது. தொற்று பரவலை குறைக்க சமூக விலகல் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகள் அவசியமாக இருக்கும் நேரத்தில் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் உள்ளிட்டவை பொதுவாக நம்மை தனிமையாக உணர வைக்கிறது மற்றும் மன அழுத்தம், கவலை மற்றும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளாகும். மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடும். பலருக்கு கொரோனா வைரஸைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வது கடினமான விஷயமாக இருக்கிறது. நாம் தொற்றால் எவ்வாறு பாதிக்கப்படுவோம், இது இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எவ்வளவு மோசமான விஷயங்களை ஏற்படுத்த கூடும் உள்ளிட்ட கவலைகள் நம்மை தொடர்ந்து பயத்திலேயே வைத்துள்ளன. இந்நிலையில் ஆரோக்கியமான வழிகளில் மன அழுத்தத்தை சமாளிக்க கற்றுக்கொள்வது உங்களையும், நீங்கள் அக்கறை கொண்ட நபர்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மேலும் பாதுகாப்பாக வைக்கும். இந்த சவாலான காலங்களில் பதற்றத்தை நிர்வகிக்க சில எளிய டிப்ஸ்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதுவரை இல்லாத அளவு நாம் நெருக்கடியில் இருக்கிறோம் என்றாலும் கூட கொரோனா தொடர்பான மன கவலைகளை சில டிப்ஸ்கள் மூலம் நம்மால் எளிதாக கையாள முடியும்

பலர் ஏன் மனஅழுத்தமாக உணர்கிறார்கள்? COVID பதற்றம் அதிகரிக்கிறதா?

எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராகவில்லை என்பதே பதற்றமும், மன அழுத்தமும் அதிகரித்து காணப்பட காரணமாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக நம் அன்றாட வாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் மாற்றிவிட்டது கொரோனா. தொற்று எப்போது முழுவதும் அகலும் என்ற பதில் இல்லாத நிச்சயமற்ற தன்மை நம் அச்சத்தை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டை விட அதிகம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதும், நிறைய உயிரிழப்புகள் நிகழ்வதும் பலருக்கு மன அழுத்தத்தை அதிகரிக்க செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பதற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

கோவிட் தொற்று முழுவதும் இல்லாமல் போக இன்னும் நீண்ட மாதங்கள் ஆகலாம். எனவே நாம் அனைவரும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை மிகவும் கவனத்துடன் நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது பற்றி கூறும் உளவியலாளர்கள், மனநல விஷயங்களுக்கு முன்னுரிமை தேவைப்படும் போது, குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்படும் கவலைகள் மற்றும் மன அழுத்தம் ஒரு இயற்கையான உணர்ச்சியே என்ற உண்மையை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் மற்றும் புரிந்து கொள்ள வேண்டும். ஆறுதலளிக்கும் செயல்களில் ஈடுபடுவது, உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயங்களை செய்வது போன்ற நடவடிக்கைகள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் மகிழ்ச்சி ஹார்மோனான டோபமைனை வெளியிட உதவுகின்றன. தவிர முகக்கவசங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயிற்சி செய்வதும் உதவியாக இருக்கும்.

ஊரடங்கில் ஆரோக்கியம் முக்கியம்!

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க தூக்க பழக்க வழக்கம் உதவுவதால் சரியான நேரத்தில் தூங்கி எழுவது முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மதுப்பழக்கம், நிகோடின் மற்றும் அதிகப்படியான கஃபைன் கொண்ட தயாரிப்புகளை எடுத்து கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க எப்போதும் உடல் பயிற்சிகள் செய்வது அவசியம். ஒரு நபர் ஒவ்வொரு நாளும் தவறாமல் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். தற்போதைய நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, ‘இதுவும் கடந்து போகும்’ என்ற எண்ணத்தை அதிகரிக்க நிகழ்காலத்தின் எளிய சந்தோஷங்களை அனுபவிப்பது முக்கியம்.

அன்றாட வாழ்க்கையில் கொரோனா பற்றிய வீண் கவலை ஏற்பட்டால்..?

உங்கள் கவலையை உள்ளுக்குள்ளேயே வைத்திருக்காமல், உங்கள் மனதில் பயம் மற்றும் பதற்றம் பற்றிய ஒரு எண்ணம் இருப்பதாக நீங்கள் உணரும்போதெல்லாம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்மறை எண்ணங்கள் தொடர்ந்து தொந்தரவு செய்தால் ஒரு மனநல நிபுணரை அணுகலாம். நெருக்கடி சூழ்நிலைகள் வரும்போது மக்கள் பயத்தை பதிலாக அளிக்காமல், அதை எதிர்கொள்ளும் மன தைரியத்தை பதிலாக அளிக்க வேண்டும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published.