பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பெரிய நகரங்களிலேயே அமைக்கப்படுகிறது. இனிமேல் சிறிய நகரங்களிலும் தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தொழில் அதிபர்கள் உச்சி மாநாட்டில் காணொலிக்காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெரிய நகரங்களுக்குப் பதிலாக சிறிய நகரங்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டும் என பேசினார்.

சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தொழில் அதிபர்களாக மாற அரசு தொடர்முயற்சிகளைச் செய்து, அதற்கான சூழலை ஏற்படுத்தி வருகிறது. தொழிலதிபர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து வங்கி மற்றும் பிற துறைகளிலும் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, சீர்திருத்தங்களைச் செய்யலாம்.
கோவிட் பெருந்தொற்றின்போதும் சிறு குறு நடுத்தர நிறுவமான எம்.எஸ்.எம்.இ அதிவேக வளர்ச்சியை அடைந்தது. தற்போது இந்தத் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. எனவே, நிதி சாம்ராஜ்யங்களை அமைப்பதில் புதிய கண்ணோட்டம் வேண்டும். இளைஞர்கள் தொழில் அதிபர்களாகக் கனவு காண வேண்டும்” எனப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.