Tamil Entrepreneurs

சாவரின் தங்கப் பத்திரம் 2016-17 சீரிஸ் 4 – தங்க முதலீட்டில் கிடைத்த லாபம் என்ன தெரியுமா? | Sovereign Gold Bond 2016-17 Series 4 – Do you know what is the return on gold investment?


மத்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் சாவரின் கோல்ட் பத்திரங்கள் என்ற பெயரில்  999 என்ற அளவில் 24 கேரட் சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுதோறும் 2.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதிர்வு காலமாக எட்டு ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் இடையில் பணம் தேவைப்பட்டால் முதலீடு செய்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

சாவரின் கோல்டு பாண்டு

சாவரின் கோல்டு பாண்டு

அவ்வாறு கடந்த 2016-17 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிட்டது. தங்க பத்திரங்கள் வெளியிடும் பொழுது திட்ட காலம் தொடங்கப்படுவதற்கு முன்புள்ள ஒரு வாரத்தின் சராசரி விலையில் யூனிட் களின் விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும்  ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் போது சராசரி சுத்த தங்கத்தின் விலையில் இருந்து 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். அதன்படி அந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்ட பொழுது சுத்த தங்கத்தின் விலை ரூ. 2,943 ஆக இருந்தது. அந்த விலையில் ரூ.50 தள்ளுபடி கொடுக்கப்பட்டு ஒரு யூனிட் விலை ரூ. 2,893 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள படியால் முதலீட்டாளர்கள் விருப்பப்பட்டால் இந்த திட்டத்தில் இருந்து தற்போது விலகிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published.