நிறுவனம்: தமிழக ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையின்கீழ் மாவட்ட வாரியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி புதுக்கோட்டை 36, நாமநாதபுரம் 20, திருவாரூர் 14, காஞ்சிபுரம் 8, பெரம்பலூர் 16, நாகப்பட்டினம் 18, செங்கல்பட்டு 14, சிவகங்கை 12, திருநெல்வேலி 4, தூத்துக்குடி 17, கடலூர் 39, தர்மபுரி 23, வேலூர் 16, திருவள்ளூர் 28, திருவண்ணாமலை 80, விழுப்புரம் 17, கள்ளக்குறிச்சி 17, சேலம் 53, ஈரோடு 17, கன்னியாகுமரி 3, கிருஷ்ணகிரி 33, நாமக்கல் 43, நீலகிரி 9, தஞ்சாவூர் 27, திருப்பத்தூர் 14, கரூர் 16, மதுரை 11, அரியலூர் 16 ஆகிய மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்டு பணிகள் காலியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
தேர்வு செய்யும்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் (உதாரணமாக https://cuddalore.nic.in/past-notices/recruitment/) இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைப்படி விண்ணப்பிக்கலாம். மாவட்டவாரியாக விண்ணப்பிக்க 4.12.2020 முதல் 18.12.2020 வரை கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.