இருந்தாலும் ஒருசில நிகழ்வுகள் நம் இதயத்தை ஒரு நிமிடம் நிறுத்தும் அளவு அரங்கேறுகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் கேரளா மாநிலத்தில் உள்ளது கண்ணூர் மாவட்டத்தில் நடந்தது. இந்த மாவட்டத்தில் தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா கிராமம். இங்கு கடந்த 2 தினங்களுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் சாலையை கடக்க முயலும் போது பைக்கில் மோதினான்.
Talk about being lucky…🚴🏼♂️#RoadAccident #Miracle pic.twitter.com/GMzMTTfqXR
— Bobins Abraham Vayalil (@BobinsAbraham) March 23, 2022
அந்த சிறுவன் அடுத்தடுத்து தொடர்ந்து வரும் பைக் மற்றும் பேருந்தின் நடுவே வேகமாக நுழைகிறான். பைக்கில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதால் அதே சமயத்தில் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து அவன் நூல் இழையில் தப்பித்தான். பின் எழுந்து நின்று செய்வதறியாது கைகால்களை துடைத்தபடி நிற்கிறான்.
பேருந்தில் சிக்கிய அவனது மிதிவண்டி சுக்கு நூறானது. அதே நேரத்தில் சிறுவன் சிறு காயங்களோடு உயிர் பிழைத்தான். தற்போது இது குறித்து வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.