Tamil Entrepreneurs

ட்விட்டர், மெட்டா வரிசையில் அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு!


கடந்த இரண்டு வாரங்களாக ட்விட்டர், மெட்டா போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடடிக்கைகளை ஈடுப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது அமேசான் நிறுவனமும் லேட்டஸ்டாக இணைந்துள்ளது.

அமேசான்

கடந்த சில மாதங்களாக, அமேசான் நிறுவனம் லாபகரமாக இயங்காமல், நஷ்டம் அதிகரிப்பதால் அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அமேசான் நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை இந்த வாரம் முதல் தொடங்கும் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

ஆட்குறைப்பு

உலகளவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட அமேசான் நிறுவனம், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் தங்களது 1 சதவீதத்திற்கும் குறைவான பணியாளர்களையே இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்சா ஆகிய அமேசானின் சாதனங்கள் பிரிவு, மனித வளப் பிரிவு போன்ற பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளாவர்கள் என்று கூறப்படுகிறது.

அமேசான்

அமேசான் நிறுவனம் தங்களது ஒரு மாத மதிப்பாய்வுக்குப் பிறகு, சில லாபமில்லாத யூனிட்களில் பணிபுரியும் தங்களது ஊழியர்களை, நிறுவனத்திற்குள் இருக்கும் மற்ற வாய்ப்புகளைத் தேடுமாறு எச்சரித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது அமேசான் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு லாபத்தை ஈட்டியது. ஆனால், கொரோனா பெருந்தொற்று குறையும் இந்த காலகட்டத்தில், இரண்டு பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published.