Covid-19

தமிழகத்தில் 25,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு… குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

தமிழகத்தில் புதிதாக 24405  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32221 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,72,751 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 32,221 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,66,660 ஆக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தொற்று வெகுவாக குணமடைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் உள்ளது. கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 460 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 25,665 ஆக அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 2980 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2062  பேருக்கு கொரோனா தொற்றும், 68 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments