Tamil Entrepreneurs

நண்பர்கள் தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் – News18 Tamil


நட்பு என்பது மனிதர்களுக்கு இடையே உள்ள மிக அழகான உறவுகளில் ஒன்றாகும்.வாழ்க்கையில் விஷயங்கள் தவறாக நடக்கும் போது நம் நம்பிக்கையை அதிகரிக்க, மனச்சோர்விலிருந்து நாம் மீள ஒரே ஒரு உண்மை நண்பன் இருந்தால் போதும். அன்பினால் பிணைக்கப்பட்ட மனித உறவின் தூய்மையான வடிவமாக நட்பு இருக்கிறது. வாழ்வின் எந்த சூழலிலும் நமக்காக உறுதுணையாக இருக்கும் நண்பர்களை பெருமிதமாக நினைவுகூரும் வகையில் சர்வதேச நட்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச நட்பு தின வரலாறு:

நண்பர்கள் தினம் முதன்முதலில் 1930-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஜாய்ஸ் ஹால் என்பவரால் இந்த நாள் நிறுவப்பட்டது. இவர் Hallmark cards நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த தினத்தை கொண்டாட முன்மொழிந்தார். இருப்பினும் அமெரிக்காவில் நண்பர்கள் தினம் விரைவில் பிரபலத்தை இழந்தது.

ஏனெனில் இது வாழ்த்து அட்டைகளை விற்பதற்கான ஒரு தந்திரம் மட்டுமே என்பதை மக்கள் உணர்ந்தனர். எனினும் பெரும்பாலான ஆசிய நாடுகளில் நண்பர்கள் தினம் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கடந்த ஏப்ரல் 27, 2011 அன்று அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்க ஜூலை 30-ஆம் தேதியை சர்வதேச நட்பு தினமாக முறையாக அறிவித்தது.

international friendship day

சர்வதேச நண்பர்கள் தினம் இந்தியாவில் எப்போது.!

சர்வதேச நண்பர்கள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 30 கொண்டாடப்படும் அதே வேளையில், இந்தியா, வங்கதேசம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஈக்வடார், எஸ்டோனியா, பின்லாந்து, மெக்சிகோ, வெனிசுலா மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளில் காதலர் தினம் மற்றும் நண்பர்கள் தினம் பிப்ரவரி 14 அன்று சேர்த்தே கொண்டாடப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் நண்பர்கள் தினம் ஏப்ரல் 16-ல் கொண்டாடப்படுகிறது. உக்ரைனியர்கள் ஜூன் 9 அன்று கொண்டாடுகிறார்கள்.

Also Read : பூமியில் கடைசி மனிதனின் செல்பி எப்படி இருக்கும்? செயற்கை நுண்ணறிவு வழங்கிய அதிர்ச்சி படங்கள்

சர்வதேச நண்பர்கள் தினத்தின் முக்கியத்துவம்:

இனம், மதம் அல்லது மொழியை பொருட்படுத்தாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஒன்றிணைக்கும் வலுவான நட்பை உற்சாகமாக கொண்டாடும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நட்பின் மூலம் நம்பிக்கையின் அடிப்படையில் வலுவான உறவுகளை வளர்க்கலாம். நம் அனைவரையும் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்கலாம். சிறந்த உலகை முன்னெடுத்து செல்வதற்கான ஆர்வத்தை நம் அனைவர் மத்தியிலும் உருவாக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகிறது.

கருப்பொருள்:

இந்த ஆண்டு சர்வதேச நண்பர்கள் தினத்தின் கருப்பொருள் நட்பின் மூலம் மனித உணர்வைப் பகிர்ந்து கொள்வது என்பதாக இருக்கிறது. நட்பு என்பது மக்களிடையே அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான ஒரு அடிப்படை ஆயுதமாக இருக்கிறது. மேலும் சமூகங்களுக்கு இடையே சமூக நல்லிணக்கத்தையும் பேணுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link

Leave a Reply

Your email address will not be published.