Tamil Entrepreneurs

“நம்முடைய போட்டி, இந்திய மாநிலங்களோடு அல்ல!’’ 1 ட்ரில்லியன் டாலர் கனவு…முதல்வர் ஸ்டாலின் முழக்கம்! | “Our competition is not with Indian states!” 1 Trillion Dollar Dream… CM Stalin’s Slogan!


இந்தக் கருத்தரங்கின் இலக்கு தமிழகம் இந்திய மாநிலங்களோடு மட்டும் போட்டி போடாமல் சர்வதேச நாடுகளுக்கு இணையாக போட்டியிடும் அளவுக்கு முன்னேற்றம் அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மையமாக வைத்து கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஜவுளித் துறையைப் பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியிலும் மூன்றாவது பெரிய இடத்தினை வகிக்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக ஜவுளித் தொழில் இருக்கிறது.

இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு 12% பங்களிப்பை வழங்குகிறது. தமிழ்நாட்டில் 1,861 நூற்பாலைகள் உள்ளன. இது இந்திய நாட்டின் பங்கில் 55% ஆகும். மேலும், இந்தியாவிலுள்ள விசைத்தறிகளில் 23% விசைத்தறிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 31 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பினை வழங்கிவருகிறது. எனவேதான், நாம் இத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இத்துறையின் திறனை மேலும் மேம்படுத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.



Source link

Leave a Reply

Your email address will not be published.