Tamil Entrepreneurs

நீங்கள் கோடீஸ்வரர் ஆக உதவும் 5 முக்கிய அம்சங்கள்..! | 5 important features that will help you become a millionaire..!


சம்பள மட்டுமே வருமானம் என்பதை தாண்டி பல வழிகளில் வருமானத்துக்கு ஏற்பாடு செய்வது நிதி வாழ்க்கை வளமாக உதவும். தினசரி சில மணி நேரங்கள் அல்லது வார இறுதியில் பகுதி நேர வேலை என ஏதாவது செய்வது மூலம் வருமான வழியை அதிகரிக்க முடியும்.

யூடியூப் வீடியோ போடுவது, பிளாக் எழுதுவது, புத்தகம் எழுதுவது என  வருமானத்தை அதிகரிக்க முடியும்.

சிவகாசி மணிகண்டன்.  நிதி ஆலோசகர், Aismoney.com

சிவகாசி மணிகண்டன். நிதி ஆலோசகர், Aismoney.com

நல்லக் கடனுக்கும் கெட்டக் கடனுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குடியிருக்க வீட்டு வசதியை ஏற்படுத்தி தரும் வீட்டுக் கடன் நல்ல கடன் ஆகும். இதேபோல், உங்கள் நிதி வாழ்க்கையை மேம்படுத்த உதவும் தொழில், வணிக் கடன்கள் நல்லக் கடன்களாகும். இவற்றுக்கான வட்டி ஓரளவுக்கு குறைவாக  இருக்கும்.

 தேவையில்லாமல் செலவழிக்க வைக்கும் மிக அதிக வட்டியிலான கிரெடிட் கார்ட் கடன்கள், தனிநபர்களை தவிர்ப்பது நல்லதாகும். இவை கெட்டக் கடன்களாகும். இந்தக் கடன்களை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் கோடீஸ்வரர் ஆக பட்ஜெட் போட்டு செலவு செய்வது மிக முக்கியமாகும். இப்படி பட்ஜெட் போடும் போது, வரவு மற்றும் செலவு கண்காணிக்கப்படும். பட்ஜெட் போடும் போது குடும்ப உறுப்பினர்களையும் அதில் இணைத்துக் கொண்டால், தேவையில்லாத செலவுகள் மிகவும் குறையும்.

அதனால், தேவையில்லாத செலவுகள் குறையும் போது தானே சேமிப்பு அதிகரிக்கும். அப்போது நீங்களும் விரைந்து கோடீஸ்வரர் ஆவீர்கள்.

இந்த ஐந்து அம்சங்களை பின்பற்றி கோடீஸ்வரர் ஆக வாழ்த்துகள்.   



Source link

Leave a Reply

Your email address will not be published.