Tamil Entrepreneurs

நெருக்கடி நிலையில் திருப்பூர் தொழில் துறை… பின்னலாடை ஏற்றுமதி 34% சரிவு! | Tirupur textile export fallen 34 percentage


பின்னலாடை மூலம் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் நகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடைகள் மற்றும் ஓவன் ஆடைகள் தயாரிப்பில் இந்திய அளவில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அதுசார்ந்த சாயமிடுதல், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூரில் கொரோனாவுக்குப் பிறகான பின்னலாடை ஏற்றுமதி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. நூல் விலை உயர்வு, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த 2021-22-ஆம் ஆண்டு செப்டம்பரில் 130 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இந்த செப்டம்பரில் 106.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் 18.06 சதவீத சரிவும், கடந்த ஆண்டு அக்டோபரில் ஆடை ஏற்றுமதி 125.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, கடந்த மாதம் அக்டோபரில் மிகவும் சரிந்து 98.9 பில்லியன் அமெரிக்க டாலர் என, கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும் இந்த அக்டோபரில் 34 சதவீதம் சரிவை கண்டுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published.