குழந்தைகள் என்றாலே எப்போதும் மகிழ்ச்சியின் ஆரவாரம் தான். அழுதாலும், சிரித்தாலும், கோபமடைந்தாலும், வெட்கப்பட்டாலும், சண்டையிட்டாலும் இவர்களின் செய்கைகளை நாம் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இணையதளப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இதுபோன்ற சில வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது.
குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகள், புத்திசாலித்தனமாகப் பேச்சுகள் குறித்த வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் டிரெண்டாகிவருகிறது. “ எனக்கு சோறு தான் முக்கியம் சங்கம் முக்கியமில்லை என்பது முதல் இரு என்ன அடிச்சேல்லா அப்பா கிட்ட சொல்கிறேன் என்று குழந்தையென்று அம்மாவிடம் சண்டையிடும் காட்சிகள்“ என பல குழந்தைகளின் அழகான ரியாக்சன் குறித்த வீடியோக்கள் சில நாள்களுக்கு நம் மனதை நீங்கவே நீங்காது. அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது.
அப்படி என்ன அந்த வீடியோவில் இருந்தது என நாமும் தெரிந்துக்கொள்வோம்.. பொதுவாக குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடினாலும் சோர்வடையாது, எனக்கு கால் வலிக்கிறது இனி விளையாட மாட்டேன் என்று எந்தவித சாக்கு போக்குகளைச் சொல்லாது. அதே சமயம் விளையாடியது போதும் வாங்க படிக்க என்று கூறினால் போதும். அய்யோ… அவர்களின் கோபத்திற்கு எல்லையே கிடையாது. போ அம்மா நான் வர மாட்டேன்.. எனக்கு ஹோம் ஒர்க் இல்லை என படிப்பதைத் தவிர்க்க குழந்தைகள் இதுப்போன்ற வித்தியாசமானக் காரணங்களைக் கூறுவார்கள்.
நிச்சயம் இது நமக்கு கோபத்தை உண்டாக்குவதை விட வேடிக்கையாகத்தான் இருக்கும். அப்படித்தான் இணையத்தில் டிரெண்டாகும் இந்த வீடியோவில், தன்னுடைய குழந்தையை தாய் ஒருவர் படிக்கச் சொல்கிறார். அப்போது அந்த குழந்தை அழுதுக் கொண்டே.. அட பாகல் அம்மா( லூஸ் அம்மா) நான் படிச்சிட்டே இருந்தா எனக்கு வயதாகிவிடும் என்று அவர் கூறுகிறார்.
அதற்கு குழந்தையின் அம்மா நீங்கள் படிப்பறிவற்ற முதியவராக இருக்க விரும்புகிறீர்களா? பொறுமையாக படிங்கள் என்றும் வயதானவுடன் அறிவைப் பெறுங்கள் என்று அலட்டாக சொல்லுவது போன்று வீடியோ அமைகிறது.
இப்ப படிக்கல என்று கூறுவதற்கு எப்படித் தான் இதுப்போன்ற காரணங்கள் எல்லாம் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதோ? என்று நெட்டிசன்களை இந்த வீடியோ கவர்ந்துள்ளது.
Read More: தன் செலவுகளை கவனித்துக் கொள்ள ஆண் நண்பரை நியமித்த இளம்பெண் – இறுதியில் நடந்த ட்வீஸ்ட்
தற்போது டிவிட்டரில் வெளியான இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதோடு 3.5 ஆயிரத்திற்கும் அதிகமான பயனர்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் தெறிக்க விடுகின்றனர்.
ज़िन्दगी भर पढ़ाई करते करते बुड्ढा हो जाऊंगा 🥲😅 pic.twitter.com/D3XNoifVSm
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) September 28, 2022
“ குழந்தைகள் படிக்கும் போது படிக்கட்டும்.. குழந்தைகளின் ஒவ்வொரு செய்கைகளையும் பாரட்டுங்கள்.. நிச்சயம் படிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.. இப்பவே இந்த குழந்தைப் படிப்பதற்கு காரணம் சொல்கிறது என்றால் பெரிசாகிட்டா.. என்பது போன்ற பல நகைச்சுவையான கமெண்ட்டுகளையும் ஈமோஜிகளையும் டிவிட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.