Memes
oi-Velmurugan P
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நாளை குஜராத் லைன்ஸ் அணியுடன் மோத உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் தோற்றது குறித்து மீம்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நாளை (ஞாயிறு) ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோதப்போகிறது என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் கிடைத்துள்ளது.
குவாலிபையர் ரவுண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்த காரணத்தால் அந்த அணியை கிண்டல் செய்து மீம்ஸ்கள் பரவி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி கிண்டல் செய்வது போல் மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் ரஜினியாக சிஎஸ்கேவும், ஆதியாக மும்பை இந்தியன்சும் உள்ளது போல், சிவாஜி படத்தின் மீம்ஸை பரப்பி வருகிறார்கள்,
இன்னொரு மீம்ஸ் வீடியோவில் மும்பை இந்தியன்ஸ் அணியை பாண்டே பிரதர்ஸ் விரட்டி அடிப்பது போல் இருக்கிறது
English summary
As Chennai Super Kings are set to face Gujarat Lions tomorrow, a meme video about Mumbai Indians losing is going hit.