கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டு அலைகள் காரணமாக பொதுமுடக்கங்களை நாடு சந்தித்திருந்தது. இதனால், பல தொழில்கள் முடங்கின, வேலையின்மை அதிகரித்து பல குடும்பங்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன. மேலும், அமைப்புசாரா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சில தொழில்களை முழுமையாக மூடும் நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டனர். தினம் தினம் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் எப்போது கொரோனா அலை முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் நாட்களை நகர்த்துகின்றனர்.
பிரதமர் மோடிக்கு பணம் அனுப்பியது குறித்து அனில் மோர் கூறுகையில், ‘பிரதமர் மோடி தனது தாடியை நன்கு வளர்த்துக்கொண்டார். அவர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால், அது இந்த நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் அமல்படுத்தப்பட்ட இரண்டு பொதுமுடக்கங்களால் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துயரங்களிலிருந்து விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், பிரதமரின் பதவி நாட்டின் மிக உயர்ந்த பதவியாகும். நமது பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் தனது தாடியை ஷேவ் செய்வதற்காக எனது சேமிப்பில் இருந்து 100 ரூபாயை அனுப்புகிறேன். அவர் பெரிய பதவியில் உள்ள தலைவர், நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கொரோனா எனும் தொற்றுநோயால் ஏழை மக்களின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இது அவரது கவனத்தை ஈர்க்கும் ஒரு வழியாகும் என்கிறார் அனில் மோர்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 30 ஆயிரம் நிதியுதவியும் வழங்க வேண்டும் என்று மோர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.