Tamil News

பீஸ்ட் பாணியில் திமுகவின் கொண்டாட்டம்! தொண்டர்களின் அட்ராசிட்டி! | DMK Celebrates with Beast Style Poster


தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவுற்றதை திமுகவினர் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.

பல அரசியல் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதிமுக சார்ப்பில் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த கொண்டாட்டங்களில் திமுகவினர் அதிகபடியாக “திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்தது” என கோஷங்களை எழுப்பாத குறையாக தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் வாக்குறுதிகள் அவர்களின் பெருமைக்கு பொய்மையில்லாமல் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடதக்கது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், ஆவின்  பால் விலை குறைப்பு , மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை சவால்களுக்கு நடுவில் நிறைவேற்றியது தான்.

ஒரு மாதத்துக்கு முன்பு பேசிய முதல்வர் ஸ்டாலின், `ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளாகச் சொன்ன 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றைச் செய்துவிட்டோம்’ என சட்டப்பேரவையில் பேசியிருந்தார். 

மேலும் படிக்க | ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு – 17 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை

இப்போது சுமார் 270-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தி.மு.க-வினர் பேசி வருகிறார்கள்.  மேலும் ஒராண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களையும் திமுகவினர் செய்து வருகின்றனர்.

இதனால் அவர்களது வெற்றி கொண்டாட்டமும் கொஞ்சம் அதீத அளவில் தான் இருக்கிறது என பொது மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் திமுக ஒராண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடப்பட்டு வருகின்றது. 

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தின் வசனமான “என்ன பயமா இருக்கா! 2024 இன்னும் பயங்கரமா இருக்கும்” என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

Beast Style Celebration Dmk

மேலும் சிலர் இவர்களது இந்த போஸ்டர் வசனம் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடிக்க போகிறது திமுக ஆட்சி என்பதை உணர்த்துகிறதா?, இல்லை திமுக ஆட்சிக்கு வந்து இந்த ஒரு ஆண்டுக்குள் அதிமுக அமைச்சர்களின் நிலை திண்டாட்டத்தில் நிற்பது மேலும் மோசமடையலாம் என்பதை இந்த வசனம் ஜாடைமாடையாக குறிக்கிறதா என இணையத்தில்  நெட்டீசன்கள் பல்வேறான கருத்துகளை முன்வைத்து பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க | தமிழக ‘ஷவர்மா’ கடைகளுக்கு ஆப்பு! கேரள மாணவி மரணத்தின் எதிரோலி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published.