Tamil Meme

புரட்டாசி ஆரம்பமானதுகூட கவலையில்ல.. ஞாயிறும் அதுவுமா ஆரம்பிச்சிருச்சேங்கறதுதான் பெருங்கவலையா இருக்கு | Funny memes collection on purattasi month ending


Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: அசைவப் பிரியர்களுக்கு தமிழில் பிடிக்காத மாதமென்றால் அது புரட்டாசிதான். அதனால்தான், இன்னும் ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிட முடியாதே என்ற ஆதங்கத்தை புரட்டாசி பிறந்த முதல் நாளான இன்றே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கேடு, அதனால்தான் அந்த ஒரு மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் எவ்வளவோ யோசித்து செயல்பட்டிருக்கிறார்கள் என மூளைக்கு புரிந்தாலும், இந்த நரம்பில்லாத நாக்கிற்கு அதன் அருமை புரிவதே இல்லை. பறப்பதில் விமானத்தையும், மிதப்பதில் கப்பலையும் தவிர்த்து அனைத்தையும் சாப்பிடுவோம் என நாடி நரம்புகளில் அசைவ உணவு ருசி ஊறிய அன்பர்களுக்கு புரட்டாசி ஒரு மாதம் முழுவதும் நாக்கைக் கட்டிப் போடுவது என்பது கஷ்டமான காரியம்தான்.

புரட்டாசி மாத ராசி பலன் 2022: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..வாழ்க்கையில் திடீர் மாற்றம் வருமாம்! புரட்டாசி மாத ராசி பலன் 2022: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..வாழ்க்கையில் திடீர் மாற்றம் வருமாம்!

ஒரு சிலர் ‘எங்களுக்கு இது புரட்டாசி இல்ல.. செப்டம்பர் மாதம் தான்’ என நேக்காகத் தப்பித்துக் கொண்டாலும், குடும்பத்தின் கட்டாயம் காரணமாக பலர், இந்த ஒரு மாதம் முழுவதும் அசைவ உணவின் பக்கம்கூட செல்ல முடியாத கட்டுப்பாட்டில் உள்ளனர். வேறு வழி, சாப்பிடத்தான் முடியாது.. தங்களது ஆதங்கத்தை மீம்ஸ் போட்டாவது கொஞ்சம் ஆற்றிக் கொள்வோம் என புரட்டாசி முதல்நாளான இன்றே அசைவ உணவுகள் பற்றிய மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் தெறிக்கவிட்டுள்ளனர்.

இதோ அப்படியான சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக…

Funny memes collection on purattasi month ending

Funny memes collection on purattasi month ending

Funny memes collection on purattasi month ending

Funny memes collection on purattasi month ending

Funny memes collection on purattasi month ending

Funny memes collection on purattasi month ending

Funny memes collection on purattasi month ending

Funny memes collection on purattasi month ending

English summary

These are some jolly memes collection on purattasi month ending

Story first published: Sunday, September 18, 2022, 18:54 [IST]





Source link

Leave a Reply

Your email address will not be published.