இதில் ஆப்பிரிக்காவில் 25, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 25, மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளில் 19 உள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது. இதன்படி தற்போது ஐ.எம்.எஃப் இலங்கையைப் போலவே துருக்கி, எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், கானா, கென்யா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா, அர்ஜென்டினா, எல் சால்வடார், பெரு ஆகிய நாடுகள் உடன் நிதியுதவிக்காகவும், புதிய கடனுக்காகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதனால் கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன என்பதை உலக வங்கி, ஐ.நா, ஐ.எம்.எஃப் தரவுகள் வாயிலாகத் தெரிகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் பொருளாதார நிலையில் குழப்பமான நிலையை உருவாக்கி இருக்கிறது.
இந்தக் குழப்பத்தை போக்க பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யப்போகிறார் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.