Tamil Entrepreneurs

போட்டி நிறுவனங்களுடன் `Moonlighting’: 300 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய விப்ரோ! | moonlighting – wipro terminated 300 employees


மேலும் அவர் அந்த மாநாட்டில் பேசியபோது, “இப்படியானவர்கள் வார இறுதியில் வேறொரு நிறுவனத்திலோ, குழுவிலோ பணி செய்யத் தொடங்கும்போது, வெளிப்படைத்தன்மையின் ஒரு பகுதியாக அதுகுறித்து மனம் திறந்து உரையாடல்களை நிறுவனத்திலேயே நடத்தலாம். நிறுவனமும், ஊழியரை புரிந்து கொண்டு யாரையும், எதுவும் பாதிக்காமல் இருக்க வழிவகை செய்யும்.

எங்கள் பிரச்னை, இந்தப் பணியாளர்கள் வேறு ஏதோ நிறுவனத்திற்காக பணிபுரிகிறார் என்பதல்ல. ஆனால் எங்களது நேர் எதிர் போட்டியாளர் நிறுவனத்தில், எங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக பணிபுரிவதை ஏற்க இயலாது. நேரடி போட்டியாளருக்கு பணிபுரிவதென்பது, சட்ட மீறுதலாகும். தொழில்நுட்ப துறையில் பணி செய்வோர், இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் பணி செய்வது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்வார்கள். ஆனால் இதை எளிமையாக சொல்லவேண்டுமென்றால், இது ஏமாற்று வேலை. அவ்வளவுதான்” என்றுள்ளார்.

ஐடி துறை- representational image

ஐடி துறை- representational image

இதுதொடர்பாக வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெக் மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி, மூன் லைட்டிங்கிற்கு ஆதரவாக சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், `காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பது அவசியம். உண்மையில் இதை நான் வரவேற்கிறேன்’ என்று கூறினார்.

அதே நேரம், இன்ஃபோஸிஸ் நிறுவனம், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிவதை தவறென்றே கூறுகின்றது. இந்த நிலையில், தற்போது 300-க்கும் மேற்பட்டோரை விப்ரோ நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது, தகவல் தொழில் நுட்பத்துறை பணியாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்பென்ட் ஷீலா



Source link

Leave a Reply

Your email address will not be published.